தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை; இருவருக்கு சிறை; 8 லட்சம் அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்! - FISHERMEN RELEASE

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ள இலங்கை நீதிமன்றம், இருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் படகோட்டிகள் இருவருக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

படகு கோப்புப்படம்
படகு கோப்புப்படம் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 4:28 PM IST

ராமநாதபுரம்:கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மீனவர்களை சிறை பிடிப்பது மட்டும் இன்றி அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வது, மீன் பிடி பொருட்களைச் சேதப்படுத்துவது என பல்வேறு அட்டூழியங்களிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில் இதுவரை உறுதியான தீர்வு எட்டப்படவில்லை. இந்தநிலையில் கடந்த மாதம் 23ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களுடைய 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:படகுகளை விடுவிக்க மீனவர்கள், தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் கடற்படைக்கு வழங்க உத்தரவு- இலங்கை அரசின் பிடிவாதம்!

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இன்று மீனவர்கள் 16 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "ஒரு படகில் இருந்த இரண்டு மீனவர்கள், 2வது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். மேலும் படகோட்டி இரண்டு பேருக்கும் தலா 8 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது, இதை கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறிய நீதிபதி மற்ற 12 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாளில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details