சேலம்:டிஎன்பிஎல் 8வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நேற்று மாலை 3.15 மணியளவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் அந்தோணி தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து திண்டுக்கல் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷிவம் சிங் ஆகியோர் களமிறங்கினர். இதில் அஸ்வின் 5 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த விமல் குமார் 9 ரன்களுக்கு வெளியேறினர். இதனையடுத்து ஷிவம் சிங்குடன் - பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர்.
இதில் சிறப்பாக ஆடிய ஷிவம் சிங் 78 ரன்களிலும், இந்திரஜித் 33 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதன் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் பெரியதாக சோபிக்வில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது.
ஈஸ்வரன் ஹாட்ரிக் விக்கெட்:இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ஈஸ்வரன் 32 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் முதல் முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஈஸ்வரன் பெற்றார்.