ஐதராபாத்:2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஏலத்தில் கேப்டு பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் ஏலம் போயினர். முதல் களமிறங்கிய அர்ஷ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய் தொகைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்டிஎம் கார்டு மூலம் தக்கவைத்துக் கொண்டது.
தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் கஜிசோ ரபடாவை 10 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்திற்கு எடுத்தது. இந்நிலையில், களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரை விலைக்கு வாங்க ஐபிஎல் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
மாறி மாறி இருவரும் ஸ்ரேயாஸ் ஐயரை தங்கள் பக்கம் இழுக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் ஏலம் அனல் பறந்தது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 24 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயிருந்த நிலையில், அதையும் தாண்டி ஸ்ரேயாஸ் ஐயர் ஏலம் கேட்கப்பட்டார்.