பாரீஸ்:பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடர் கோலாகல தொடக்க விழாவுடன் தொடக்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 பிரிவில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பாராலிம்பிக்ஸ் தொடரில் இன்று (ஆக.31) நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் (எஸ்ஹெச்1) பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் பங்கேற்றார். முதல் சீரிஸில் 50.0 புள்ளிகளைப் பெற்ற ரூபினா பிரான்சிஸ் இரண்டாம் இடம் பிடித்தார். 2-வது சீரிஸில் 97.6 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்தார்.
தொடர்ந்து முந்துவதும், பின்தங்குவதுமாக இருந்த அவர், இறுதியில் 211.1 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். இதில் ஈரான் வீராங்கனை சரே ஜவன்மார்டி 236.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். துருக்கி வீராங்கனை ஐசென் ஓஸ்கல் 231.1 புள்ளிகளைப் பெற்று வெள்ளி வென்றார்.