தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டாஸ் வென்று பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு! வீறுநடை போடுமா கொல்கத்தா? - IPL2024 PBKS vsKKR match Highlights - IPL2024 PBKS VSKKR MATCH HIGHLIGHTS

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 7:16 PM IST

கொல்கத்தா : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.26) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது. அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 6ல் தோல்வியடைந்து இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஐபிஎலில் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் முதன் முறையாக மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் பஞ்சாப் அணி உள்ளது. அதேநேரம் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கான போட்டியில் தொடர கொல்கத்தா அணி முனைப்பு காட்டும். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக விளையாடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), சுனில் நரேன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆந்திரே ரஸ்செல், ராமந்தீப் சிங், துஷ்மந்த சமீரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

பஞ்சாப் கிங்ஸ் : ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன் (கேப்டன்), ரிலீ ரோசோவ், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், அசுதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் ப்ரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

ABOUT THE AUTHOR

...view details