தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: ராகுல் விலகல்? இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்! - இந்தியா இங்கிலாந்துடெஸ்ட்கிரிக்கெட்

Ind vs Eng 5th test: இங்கிலாந்து அணிக்கு எதிராக மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 28, 2024, 5:43 PM IST

டெல்லி : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கிய 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. தசைப்பிடிப்பு காயம் காரணமாக 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வலைப் பயிற்சியில் கே.எல்.ராகுல் ஈடுபட்ட போது, மீண்டும் தசைப் பகுதியில் வலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 90 சதவீதம் வரை கே.எல்.ராகுல் குணமடைந்து விட்டதாகவும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவருக்கு வலி ஏற்பட்டு உள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், காயத்திற்கு சிகிச்சை பெற கே.எல்.ராகுல் லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் ராகுல், தொடருக்கு முன்னதாக பூரண நலன் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கடந்த ஆட்டத்தின் போது ஓய்வில் இருந்த ஜஸ்பிரித் பும்ரா கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணிக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக விளையாடி வரும் வீரர்களுக்கு கடைசி ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 4வது டெஸ்ட் ஆட்டத்தை தொடர்ந்து வீரர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் மீண்டும் மார்ச் 2ஆம் தேதி சண்டிகரில் ஒன்று கூட உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தர்மசாலா செல்ல உள்ளனர்.

இதையும் படிங்க :டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசல்! நமீபிய வீரர் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details