தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: லக்சயா சென், சாத்விக்சாய் - சிராக் ஷெட்டி அபாரம்! மகளிர் பிரிவில் தொடர் பின்னடைவு! - paris olympics 2024

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிசா கிராஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வி அடைந்தது. ஆடவர் பிரிவில் லக்சய சென், சாத்விக்சாய்ராய் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

Etv Bharat
Tanisha Crasto and Ashwini Ponnappa (Photo- Sports Odisha)

By ANI

Published : Jul 29, 2024, 3:32 PM IST

பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் தகுதிச் சுற்று போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய வீராங்கனைகள் தனிசா கிராஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா இணை, சர்வதேச பேட்மிண்ட தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ஜப்பானின் நாமி மட்சுயமா - சிஹாரு சிஹிடா ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் ஜப்பான் இணை 21-க்கு 11, 21-க்கு 12 என்ற நேர் செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் இணை, புள்ளிகளை சேகரிக்க வாய்ப்புகளை வழங்காமல் இந்திய இணைக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தது. முன்னதாக தனிசா கிராஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா இணை தனது முதலாவது தகுதிச் சுற்றில் கொரியாவின் சோ யோங் மற்றும் காங் ஹீ யோங் ஜோடியை 21-க்கு 18, 21-க்கு 10 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

ஆடவர் பிரிவில் காமன்வெல்த் சாம்பியன் லக்சய சென், இன்று (ஜூலை.29) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் ஜூலியன் கராகியை எதிர்கொள்கிறார். முன்னதாக தகுதிச் சுற்றில் லக்சயா சென், கவுதமாலாவின் கெவின் கார்டனை என்பவரை எதிர்கொண்டார்.

ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருந்த நிலையில், கவுதமாலா வீரர் கெவின் கார்டன் இடது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் லக்சய சென் அடுத்த நிலைக்கு முன்னேறினார். அதேபோல் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராய் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை, ஜெர்மனியின் மார்வின் செய்டல், மார்க்ஸ் லம்ஸ்பஸ் ஜோடி இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது,

ஜெர்மனி வீரர் மார்க் லம்ஸ்பஸ் முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆட்டம் மீண்டும் ஷெட்யூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சாத்விக்சாய்ராய் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி இணை தங்களது முதல் சுற்றில் பிரான்சின் லூகாஸ் கோர்வி மற்றும் ரோனன் லாபர் ஜோடியை 21-க்கு 17, 21-க்கு 14 ஆகிய நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: ரமீதா ஜிந்தல் அதிர்ச்சி தோல்வி! பதக்க வாய்ப்பை இழக்க என்ன காரணம்? - Paris Olympics 2024

ABOUT THE AUTHOR

...view details