20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
LIVE: மகுடம் சூடிய இந்தியா! - IndvsSA T20 World Cup Cricket Final - INDVSSA T20 WORLD CUP CRICKET FINAL
Published : Jun 29, 2024, 7:31 PM IST
|Updated : Jun 29, 2024, 11:00 PM IST
பார்படாஸ்:9வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. குரூப் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
LIVE FEED
இந்திய அணி சாம்பியன்
கிளெசென் அரைசதம்!
தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளெசன் 23 பந்துகளில் 51 ரன்கள் கடந்தார்.
9வது 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் தென் ஆப்பிரிக்கா?
தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்படுகின்றன.
வெற்றி முகத்தில் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்படுகின்றன.
13 ஓவர்களில்...
தென் ஆப்பிரிக்க அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்ரிச் கிளெசன் 26 ரன்களும், டேவிட் மில்லர் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
விக்கெட்!
குயின்டன் டி காக் 39 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அர்ஷ்தீப் சிங் பந்தில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
100 ரன்களை கடந்த தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை 11.2 ஓவர்களில் கடந்தது.
10 ஓவர் முடிவில்...
தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்ரிச் கிளெசன் 8 ரன்னும், குயின்டன் டி காக் 30 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு 3வது விக்கெட் இழப்பு!
தென் ஆப்பிரிக்க வீரர் திரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்சர் பட்டேல் பந்தில் போல்டானார்.
தென் ஆப்பிரிக்கா அதிரடி!
6 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. குயின்டன் டி காக் 20 ரன்களும், திரிஸ்டன் ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
மீண்டும் விக்கெட்!
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் (4 ரன்) அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
விக்கெட்!
தென் ஆப்பிரிக்க அணி முதல் விக்கெட்டை இழந்தது. ஜஸ்பிரீத் பும்ரா வீசிய ஓவரில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்கள் குவித்த நிலையில் போல்டானார்.
முதல் ஓவரிலேயே பவுண்டரி
தென் ஆப்பிரிக்க அணி முதல் ஓவரில் 6 ரன்கள் குவித்துள்ளது. ரீசா ஹென்ட்ரிக்ஸ் 4 ரன்னும், குயின்டன் டி காக் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா பேட்டிங்!
தென் ஆப்பிரிக்கா அணி இலக்கை துரத்தி விளையாடி வருகிறது.
தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் அபாரம்!
தென் ஆப்பிரிக்க அணியில் கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன், கஜிசோ ரபடா, அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்
தென் ஆப்பிரிக்காவுக்கு 177 ரன்கள் வெற்றி இலக்கு!
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி அவுட்!
மார்கோ ஜான்சன் வீசிய ஓவரில் விராட் கோலி 76 ரன்கள் குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இமாலய சிக்சர்!
மார்கோ ஜான்சனின் 18.4வது ஓவரில் 95 மீட்டர் உயரத்திற்கு விராட் கோலி சிக்சர் விளாசினார்.
ப்ரீ ஹிட் வீண்!
மார்கோ ஜென்சன் பந்தில் விராட் கோலி அவுட்டாக இருந்த நிலையில் அதை நோ பாலாக அம்பயர் அறிவித்தார். அதன்பின் கிடைத்த ப்ரீ ஹிட்டை விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வீணடித்தார்
150 ரன்களை கடந்த இந்திய அணி!
இந்திய அணி 150 ரன்களை கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறது. 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 64 ரன்களும், ஷிவம் துபே 22 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
அதிரடி மன்னன் விராட்
அரைசதம் கடந்ததும் விராட் கோலியின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. கஜிசோ ரபடா வீசிய ஓவரில் அடுத்தடுத்து 6, 2 மற்றும் பவுண்டரி விளாசினார் விராட் கோலி.
கோலி அரைசதம்!
இந்திய வீரர் விராட் கோலி அரை சதம் விளாசினார். 48 பந்துகளில் விராட் கோலி 50 ரன்கள் குவித்தார்.
இந்திய அணி ஸ்கோர்
இந்திய அணி 16 ஓவர்கள் முடிவில் 126 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. விராட் கோலி 48 ரன்களும், ஷிவம் துபே 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அக்சர் பட்டேல் ரன் அவுட்!
இந்திய வீரர் அக்சர் பட்டேல் ரன் அவுட்டானார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அக்சர் பட்டேல் 47 ரன்கள் குவித்த நிலையில், குயின்டன் டி காக் வீசிய பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
100 ரன்களை கடந்த இந்தியா!
இந்திய அணி 13.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. அக்சர் பட்டேலின் அதிரடி சிக்சர் மூலம் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.
அதிரடி அக்சர்!
12வது ஒவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் குவித்துள்ளது. அக்சர் சிக்சர் விளாசினார்.
இந்தியா 82/3
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழபுக்கு 82 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 39 ரன்னும், அக்சர் பட்டேல் 29 ரன்களும் எடுத்துள்ளனர்.
10 ஓவர்களில்....
இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 36 ரன்களும், அக்சர் பட்டேல் 26 ரன்களும் குவித்து களத்தில் உள்ளனர்
அக்சர் - சிக்சர்!
ஆட்டத்தின் 7.3வது ஓவரில் அற்புதமாக சிக்சர் அடித்து குழுமியிருந்த ரசிகர்களை அக்சர் பட்டேல் குஷிப்படுத்தினார்.
50 ரன்களை கடந்த இந்தியா!
இந்திய அணி 50 ரன்களை கடந்தது. 7.2 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
7 ஓவர்களில் இந்தியா 49-3
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 27 ரன்களும், அக்சர் பட்டேல் 10 ரன்களும் எடுத்துள்ளனர்.
பவர் பிளே!
பவர் பிளே முடிவில் இந்திய அணி 45 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. விராட் கோலி 25 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
5 ஓவர்களில்
இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 22 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மூன்றாவது விக்கெட்!
சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கஜிசோ ரபடா வீசிய பந்தில் லாங் ஆன் திசையில் இருந்த ஹென்ரிச் கிளெசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்!
இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேஷவ் மகராஜ் வீசிய ஓவரில் ரோகித் சர்மா (9 ரன்) மற்றும் ரிஷப் பன்ட் (0 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
மீண்டும் விக்கெட்!
ரிஷப் பன்ட் டக் அவுட்டாகி வெளியேறினார். கேசவ் மகராஜ் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கிடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.
விக்கெட்!
தொடக்க வீரர் ரோகித் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கேசவ் மகாராஜ் வீசிய பந்தை இறங்கி அடித்த ரோகித் சர்மா ஸ்லிப்பில் நின்ற ஹென்ரிச் கிளாசெனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பவுண்டரி... பவுண்டரி
முதல் ஓவரில் இந்திய அணி 15 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் விராட் கோலி அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசினார்.
மைதானம் எப்படி?
பார்படாஸின் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் டி20 புள்ளி விவரங்கள்:
விளையாடிய போட்டிகள்:32
முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி: 19
இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றி: 10
டை: 1
முடிவு இல்லை: 2
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்:159
அதிகபட்ச ஸ்கோர்: வெஸ்ட் இண்டீஸ் 224/5 (20) எதிராக இங்கிலாந்து (2022)
குறைந்த ஸ்கோர்:ஆப்கானிஸ்தான் 80 (16) எதிராக தென் ஆப்பிரிக்கா (2010)
உலக கோப்பையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இதுவரை!
இந்தியா 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (2007 டர்பன்)
தென் ஆப்பிரிக்கா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (நட்டிங்காம் 2012)
இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி (கிராஸ் ஐலெட் 2012 )
இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி (கொழும்பு 2012)
இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (மிர்புர் 2014)
தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (பெர்த் 2022)
20 ஓவர் உலக கோப்பையில் நேருக்கு நேர்!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை நேருக்கு நேர் 6 முறை மோதியுள்ளன. அதில் இந்திய அணி 4 முறையும் தென் ஆப்பிரிக்க அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளத். கடைசியாக 2022ஆம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இதுவரை நேருக்கு நேர்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை நேருக்கு நேஎர் 26 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இந்திய அணி 14 போட்டிகளிலும், தென் ஆப்பிரிக்கா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் போனது.
பிட்ச் எப்படி?
இந்தியா - தென் ஆப்பிரிக்கா விளையாடும் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர்கள் 7.88 என்ற எக்கனாமியுடன், 59 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அதேநேரம் பேட்டிங்கிற்கும் பிட்ச் நல்ல ஒத்துழைப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடும் லெவன்!
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
தென் ஆப்பிரிக்கா:குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.
இந்தியா பேட்டிங் தேர்வு!
இந்திய அணி டாஸ் வென்ற நிலையில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
வானிலை நிலவரம்!
பார்படாஸ் மைதானத்தில் இன்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் போட்டியின்போது 33% - 56% வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வரும் பட்சத்தில் நாளை (ஜூன் 30) ரிசர்வ் டே-வாக அறிவிக்கப்பட்டுள்ளது.