தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணியிடம் போராடி தோற்றது இந்தியா! - WOMENS T20 WORLD CUP 2024

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் போராடி தோல்வியுற்றது இந்தியா. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பும் குறைந்துள்ளது.

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோப்புப்படம்
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோப்புப்படம் (Credit - AP)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 13, 2024, 11:07 PM IST

சார்ஜா:ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை துபாயில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் தஹ்லியா மெக்ராத் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்களும், கேப்டன் தஹ்லியா மெக்ராத் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் 32 ரன்களும் விளாசினர்.

இந்திய அணி தரப்பில் ரேணுகா மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பூஜா வஸ்திரகர், ராதா மற்றும் ஸ்ரேயங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணியின், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தன ஆகியோர் களமிறங்கினர்.

இதையும் படிங்க:முகமது ஷமி இல்லாததற்கு இதுதான் காரணமா? பிசிசிஐ போடும் திட்டம் உண்மை தானா?

இதில் 1 சிக்ஸர் 2 பவுண்டரி என 20 ரன்கள் விளாசி இருந்த ஷபாலி வர்மா, ஆஷ்லே கார்ட்னர் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஸ்மிருதி மந்தன 6 ரன்களுக்கு விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினர். இதன் பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 பவுண்டரிகள் உள்பட 16 ரன்கள் விளாசிய நிலையில் மேகன் ஷட் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் இணைந்து நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் 29 ரன்கள் எடுத்து இருந்த தீப்தி விக்கெட் இழக்க, அவரை தொடர்ந்துகளமிறங்கிய ரிச்சா கோஷ் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணியால் 142 ரன்களே குவிக்க முடிந்தது. இதன் மூலம் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 54 ரன்களுடனும் களத்திலிருந்தார். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பும் குறைந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details