திருப்பதி:இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் கேன்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
டி20 உலகக் கோப்பை 2024 முடிந்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அடுத்தபடியாக கவுதம் கம்பீர் நியமனமாகியுள்ளார். இந்நிலையில், கம்பீர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தென் ஆப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றிய ரோகித் சர்மா தலையிலான இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்திய உலகக்கோப்பையை வென்றது 140 கோடி இந்தியர்களும் பெருமைப்படக்கூடிய ஒன்று என தெரிவித்தார். இதனால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார். மேலும், தேசத்திற்கு இந்த வெற்றியின் மூலம் பெருமை சேர்த்த முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.