மேஷம்: இந்த வாரம் உங்களுக்கு மிக நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் பணிகளில், அவருக்கு உதவி செய்ய வேண்டி வரும். வியாபாரத்திலும் கவனம் தேவை. காதல் உறவுகளில் காதல் பொங்கி வழியும். நிதி விவகாரங்களால் அதிகப்படியான கவலை உங்களுக்கு ஏற்படும். அது சற்று தலைவலியான பிரச்சனை தான். இருப்பினும் இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருப்பதால் உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும்.
கூட்டாண்மை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் பாட்னர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலை பற்றிச் சிந்திப்பார்கள். கல்வியில் வெற்றி காண்பீர்கள். உயர் கல்வியில் நல்ல வெற்றி கிடைக்கும். பிடித்த பாடங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்காது. அன்றாட வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள்.
ரிஷபம்:எப்போதும் இருப்பதை விட இந்த வாரம் மிகச் சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்கள் அவர்களின் காதல் துணையிடம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் காதல் பொங்கும். திருமணம் ஆகாதவர்கள், புதிய காதல் உறவை சந்திப்பார்கள். அது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆசிரியர் பணியில் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். உயர்கல்வி கற்க உகந்த நேரம் இது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் ஜூனியரான சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை மேலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சி வெற்றி அடையும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இந்த வாரம் செலவுகள் கைக்கு அடங்காமல் இருக்கும், இதனால் சற்று கவலை ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் ஆன்மிக தலங்களுக்கு யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். அங்கும் பெரும் செலவுகள் காத்திருக்கிறது.
மிதுனம்: இந்த வாரம் உங்களுக்கு மிக நன்றாகவே இருக்கும். எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருக்க முயற்சிக்க வேண்டும். ஒரு புதிய ரிலேஷன்ஷிப்பை ஆரம்பிக்க விரும்பினால், நீங்கள் அதைப் பற்றி நன்கு சிந்தித்து முடிவை எடுக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மாணவர்களுக்கும் இந்த வாரம் நன்றாக இருக்கும்.
விதிகளின்படி உங்கள் படிப்பை சரியாகப் படித்தால், நீங்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். முன்பை விட ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பயணங்கள், உணவு மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றுக்கான செலவுகள் ஏற்படும். முதலீட்டுக்கு நல்ல நேரம்.
கடகம்:இந்த வாரம் உங்களுக்குநல்ல வாரமாக அமையும். திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்க்கையில் ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். ஆசிரியர் பணியில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். மாணவர்கள் போட்டிக்குத் தயாராகினால், அவர்கள் கடின உழைப்பின் மூலம் மட்டுமே வெற்றியை அடைய முடியும். வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
வேலையில் இருப்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் பதவி உயர்வு பெறுவார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதற்காக நீங்கள் பணம் செலவழிக்கலாம். வீட்டை அழகுபடுத்துவதற்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். திருமணம் ஆகாத ஆண்களுக்கு வரன்கள் அமையும் வாய்ப்புகள் உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தாய், தாய்மாமன், தாய்வழி தாத்தா, பாட்டி ஆகியோரால் பண ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு.
சிம்மம்: இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். நண்பர்களுடன் நல்லுறவு ஏற்படும். திருமணமானவர்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அடைவார்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆசிரியர் பணியில் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். பரிச்சைகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு அதில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும். யோகா மற்றும் தியானத்தை நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும்.
குடும்பத்தின் தேவைகளுக்காகக் கொஞ்சம் ஷாப்பிங் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அரசுத் துறைகளில் இருந்து மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். இந்த வாரம் எந்த ஒரு சண்டை, சச்சரவுகளிலும் தலையிட வேண்டாம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும்.
கன்னி:இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. காதல் செய்பவர்கள் தங்கள் காதலருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்கள் குடும்பத்துடன் ஒரு இன்ப சுற்றுலா சென்று மகிழ்வார்கள். கல்வியில் வெற்றி காண்பீர்கள். மாணவர்கள் போட்டிக்குத் தயாராவதுடன், அவர்களின் படிப்பிலும் முழு கவனம் செலுத்துவார்கள். உடல் நலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம், அதனால் ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள், புதிய தொழில் நுட்பங்களைக் கையாண்டு வியாபாரத்தை மேலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். நிதி நிலைமையும் வளமாக இருக்கும். முதலீடு செய்வதற்கான சரியான நேரம் இதுவல்ல. இந்த வாரத்தில் எந்த ஒரு கொடுக்கல், வாங்கலையும் மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.
துலாம்: உங்களுக்கு இது மிகவும் சிறப்பான வாரமாகும். காதலிப்பவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களைக் கழிப்பீர்கள். ஒரு மூத்த உறுப்பினரிடமிருந்து நிதி ஆதாயம் கிடைப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றது. ஆரோக்கியம் முன்பை விட நன்றாக இருக்கும். ஆசிரியர் பணியில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவீர்கள். உயர்கல்விக்கு உகந்த நேரம். பிடித்த பாடத்தைப் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை மேலும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும், ஆனால் எந்தவொரு பரிவர்த்தனையை செய்யும் போதும் ஆழ்ந்து சிந்தித்து செய்வது நல்லது. நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்: மிகவும் நன்றான வாரமாக இந்த வாரம் இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் இல்வாழ்வில் திருப்தி அடைவார்கள். மேலும், தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சில புண்ணிய தலங்களுக்குச் சென்று வரவும் திட்டமிடுவீர்கள். காதலர்களின் வாழ்கையில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது. காதல் பார்ட்னரை உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு அறிமுகப்படுத்துவீர்கள். ஆசிரியர் பணியில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படாது.
பொருளாதார நிலை நன்றாக இருப்பதால், புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இது நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். ஆகையால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மூத்த உறுப்பினர்கள் உங்கள் வியாபாரத்தில் சிறிது பணத்தை முதலீடு செய்வார்கள். வீட்டிலேயே வழிபாடுகள் நடைபெறும்.
தனுசு: சுவாரசியம் நிறைந்த ஒரு கலவை வாரமாக இந்த வாரம் இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். மனைவியுடன் சிறிது நேரம் செலவிட்டு, உங்கள் மனதை அலைக்கழிக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்வீர்கள். இது இருவருக்கும் இடையே அன்புக்கும், காதலுக்கும் வழிவகுக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சில முக்கியமான வேலைகளைச் செய்வீர்கள், அதற்காக உங்கள் நண்பர்களிடமிருந்து நிதி உதவி பெற வேண்டியிருக்கும்.
கல்வி பயிலும் மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பார்கள். உயர்கல்வி கற்க உகந்த நேரம். உடல்நிலை நன்றாக இருக்கும். பழக்க வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வது உங்களுக்கு நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். வியாபாரம் செய்பவர்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மகரம்:காதல் உறவுகளைப் பற்றிப் பார்க்கையில் இந்த வாரம் நல்ல வாரமாக அமையப் போகிறது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு, காதலர்களின் வாழ்க்கைப் பயணமும் இனிதாக இருக்கும். உங்களைக் கவர்ந்த நபருடன் ஒரு லாங் டிரைவ் செல்வீர்கள். அப்போது ஒருவரை பற்றி மற்றொருவர் நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்கள் அவர்களின் குடும்பத்தில் நண்பரின் வருகையால் மகிழ்ச்சியடைவார்கள். அவருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்காததால் அனைவருக்கும் உங்கள் மீது கோபம் வரும்.
கும்பம்: இந்த வாரம் மிகவும் நல்ல வாரமாக இருக்கும். குடும்ப வாழ்வில் சந்தோஷமும், சமாதானமும் நிலவும். குடும்பத்தினரின் ஆதரவு முழுமையாகக் கிடைக்கும். காதலர்களின் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். சில விஷயங்களில், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பூர்வீக சொத்திலிருந்து பண ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
பொழுதுபோக்குக்காக அதிகப் பணம் செலவழிப்பீர்கள். புதிய வாகனத்தின் அனுகூலமும் உண்டு. கல்வியில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் அனைத்து வேலைகளையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி - ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பரிச்சைக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்:உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் சிறந்த முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் செய்பவர்கள் தொழிலில் வெற்றி காண்பர். உயர்கல்வி கற்க ஏற்ற காலம் இது. கல்வியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். காதலர்களின் வாழ்க்கை இனிமையானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஒரு ரொமாண்டிக் டின்னருக்கு சென்று, அங்கு இருவரும் அன்பாக உரையாடுவீர்கள்.
பொருளாதார நிலை மேலும் ஸ்திரமாகும். வருமானத்திற்கான பல வாய்ப்புகள் தேடி வரும். வாழ்கையில் வரும் புதிய விருந்தினரின் வரவால், குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான சூழல் உருவாகும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். திட்டமிட்டபடி வாங்க வேண்டும் என நினைத்த வீடு, மனை ஆகியவற்றை வாங்குவீர்கள். இந்த வாரம் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் நிதி நிலைமை வலுவாக இருந்தால், தாராளமாக செலவு செய்வீர்கள்.