மேஷம்:வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் உத்யோக செயல்களில் மூழ்கியிருப்பீர்கள். பணிச்சுமை எதிர்பாராத விதமாக அதிகரிக்கக்கூடும். இதற்காக கூடுதல் முயற்சியையும், அர்ப்பணிப்பையும் கொடுக்க நேரிடும். உத்யோகத்தில் இருக்கும் பெண்களுக்கு பிரச்சனைகள் எற்படலாம். வியாபாரம் செய்பவர்கள் உங்களுடைய போட்டியாளர்களிடம் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். சீரான தினசரி உடற்பயிற்சிகளை செய்தல், உணவைப் சரியாக உட்கொள்வது மிக முக்கியம்.
வெளிநாட்டில் தொழில் அல்லது வணிகத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட நபர்கள் சில தடைகளை சந்திக்க நேரிடும். இல்வாழ்க்கையிக் மகிழ்ச்சியை எப்போதும் அனுபவிக்க உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை புறக்கணிக்காமல் இருப்பதும் மிக முக்கியம். உங்கள் முடிவுகள் மற்றும் செயல்களில் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருப்பது அவசியம்.
ரிஷபம்:வியாபரத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் சந்திக்க நேரிடும். உத்யோக நிமித்தமாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குறிக்கோள்களை அடைவதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படலாம். ஊழியர்கள் தங்கள் சகாக்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் இணைந்து வேலை செய்ய வேண்டும். பயணத்தின் போது உடைமைகள் மற்றும் உடல் நலத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் விடாமுயற்சியின் மூலம் வெற்றி பெறுவார்கள். காதல் உறவுகளில் ஏற்படும் மோதல்களை பெண் தோழியின் உதவியுடன் தீர்க்க முடியும்.
மிதுனம்:அதிகாரம் மற்றும் தலைமை பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து சிறந்த ஆதரவு கிடைக்கும். உத்யொகத்தில் உங்களை பார்த்து பொறாமைப்படும் சக ஊழியர்கள் உங்களைச் சுற்றி இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சொத்து மற்றும் கட்டமைப்புகள் தொடர்பான சிக்கல்கள் சுமுகமாக தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. நிதி முதலீடுகளில் நம்பகமான நபர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுங்கள். காதல் துணையுடன் நேரத்தை செலவழிக்கும் வாய்ப்புள்ளது. இல்வாழ்க்கை மன நிம்மதியைத் தரும்.
கடகம்:வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு அல்லது புதிய வேலை பற்றிய கனவு நினைவாகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். சொத்துக்களை வாங்கி விற்பதன் மூலம் லாபம் ஈட்டலாம். வெளிநாட்டில் தொழில் அல்லது வியாபாரம் துவங்குவதில் சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் விருந்து அல்லது பயணத்திற்கு ஏற்பாடு செய்யலாம். காதல் உறவுகள் வலுவாக வளரும். இல்வாழ்க்கை நிறைவாக இருக்கும்.
சிம்மம்: உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உடல்நலம் தொழில்முறை செயல்திறனை நேரடியாக பாதிக்கும். முக்கிய வாய்ப்பை கவனக் குறைவால் தவறவிடும் அபாயம் உள்ளது. உங்களைச் சுற்றி உள்ள எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். சொத்து மற்றும் கட்டுமானம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். காதல் துணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பது, திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும். கண்மூடித்தனமாக செயல்படுவது உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
கன்னி:வியாபார முயற்சிகளுக்கு சாதகமான நிலை ஏற்படும். தொழிலில்முதலாளியிடமிருந்து லாபம் அளிக்கும் பதவியைப் பெறலாம். வியாபாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கனவு நினைவாகும. வீட்டிற்கு மகிழ்ச்சியளிக்கும்ஆடம்பரமான பொருள் ஒன்றை நீங்கள் வாங்கலாம். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். காதல் உறவுகள் பலமாக வளரும். உங்கள் துணையுடன் ஆனந்தமான தருணங்களை அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.