மேஷம்: தொழில் தொடர்பாக இந்த வாரம் மிகவும் பிசியாக இருப்பீர்கள். உங்ளுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம். ஆனாலும், பழைய வேலையைத் தொடர்வதே நல்லது. கூட்டாண்மையில் வியாபரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் நன்கு கவனமாகப் படிப்பார்கள். ஒரு காதல் மலர்வதற்கான சாத்தியகூறு உள்ளது. உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கை துணையுடன், ஒரு சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
ஆரோக்கியம் திருப்திகரமாகவே இருக்கும். ஆனால் உங்களிடம் இருக்கும் சில கெட்ட பழக்கங்களினால், சில பிரச்னைகள் எற்படலாம். முன்பே, செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். வருமானம் நன்றாகவே இருக்கும். பொருளாதார நிலையும், எப்போதும் போல் உறுதியாக இருக்கும். உங்கள் செலவுகளை திறமையான முறையில் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். ஏதேனும் புதிய முதலீடுகளை செய்ய விரும்பினால், நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் தாயார் உங்களுடன் வசிப்பார்.
ரிஷபம்: இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். ஆனால், மாறிவரும் காலநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு நிச்சயமாக கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஒரு சுற்றுலா செல்ல திட்டமிடலாம். காதல் வாழ்க்கை இனிமையான ஒன்றாக இருக்கும். காதல் துணையுடன் நீங்கள் கழிக்கும் நேரத்தால், காதல் மேலும் அதிகரிக்கும். வியாபரிகளுக்கு இது மிக நல்ல நேரம். உத்யோகத்தில் இருப்பவர்கள், அவர்களுடைய மேலதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.
உங்ளுடைய நிதி நிலமை நன்றாக இருக்கும். அதிக அளவில் செலவுகள் எற்படலாம். முதலீடுகள் செய்ய இது சரியான சமயம் இல்லை. வீட்டில் நடக்கும் சில விசேஷங்களினால், மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை எற்படும். ஆனாலும், அவர்களின் நண்பர்கள் உதவியால் பரிட்சையை நன்கு எழுதுவார்கள். தொழில் துறையில் வேலையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். உங்களின் எண்ணங்களை, தந்தையுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.
மிதுனம்:திருமணம் ஆனவர்கள், அவர்களின் இல்வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருப்பார்கள். காதல் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கும், இது ஒரு சிறப்பான காலம். மணமாகாதவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. உங்கள் இல்லத்தில் பூஜை, பஜனை போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு, அவர்களது வேலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும். வியாபரம் செய்பவர்கள், அவர்களுடைய வியாபாரத்தை நன்கு விரிவு படுத்துவதில் வெற்றி காண்பர்.
மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பார்கள். ஆனால் சிலர் உங்களின் படிப்பிற்கு முட்டுகட்டை போடலாம். ஆரோக்கியம் எப்பொதும் போலவே சிறப்பாக இருக்கும். நிதி நிலமையும் நன்றாக இருக்கும். செலவுகள் அதிகமாகும். வீட்டை பழுது பார்ப்பதற்காக அதிகம் செலவாகலாம். குழந்தைகளின் கல்விக்காக அதிகம் செலவழிக்க வேண்டி வரலாம். உயர்கல்விக்கு உகந்த நேரம் இது. மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான பாடத்தை படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்: இந்த வாரம் உங்களின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு வாரமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், கொடுக்கப்பட்ட பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் வாழ்க்கையில் வேறு எந்த ஒரு மூன்றாவது நபரையும் தலையிட அனுமதிக்காதீர்கள். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள், தங்கள் காதல் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் உணர்வுகளை, காதல் துணையிடம் வெளிப்படுத்துவார்கள். மேலும், குடும்ப உறுப்பினர்களிடம் தங்கள் காதல் துணையை அறிமுகப்படுத்துவார்கள். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். மாணவர்களின் உயர் கல்விக்கு உகந்த நேரம் இது. மாணவர்கள் தங்ளுக்கு பிடித்த பாடத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகமாக ஏற்படலாம். சகோதர, சகோதரிகளின் உயர் கல்விக்காக பணத்தை முதலீடு செய்வீர்கள். தாயார் உங்களுடன் வாசிப்பார்.
சிம்மம்: வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சற்று இனிமையான பொழுதுகளை கழிப்பீர்கள். அப்போது பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பதைக் கற்றுக்கொள்வீர்கள். இதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் ஏற்படாது. வாழ்க்கைத் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை வாழ்பவர்கள், தங்கள் இதயத்தில் ததும்பியிள்ள காதல் உணர்வுகளை காதலருடன் பகிர்ந்து கொள்வார்கள். உங்கள் காதல் உறவில் அன்பும் நம்பிக்கையும் காணப்படும். மாணவர்கள் முழு கவனத்துடன் படிப்பதைக் காணலாம்.
உங்களுக்கு ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியிடம் பேசும் போது மிக இனிமையாகவும், அன்புடனும் பேச வேண்டும். வியாபாரம் செய்பவர் எனில், உங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக நிறைய முயற்சிகளை எடுப்பீர்கள். அதில் வெற்றியையும் காண்பீர்கள். யாருடைய ஆலோசனையின் பேரிலும் எந்த ஒரு முதலீட்டையும் செய்ய வேண்டாம். மீறி செய்தால் நஷ்டம் ஏற்படலாம். ஆரோக்கியம் முன்பை விட நன்றாகவே இருக்கும்.
கன்னி:இந்த வாரம் குடும்பத்தினரின் ஆதரவு அமோகமாக இருக்கும். குடும்பத்துடன் ஏதாவது ஒரு புண்ணிய ஸ்தலத்திற்கு யாத்திரை செல்ல திட்டமிடுவீர்கள். அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் வருமானங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் குடும்பத்தினருடன் ஒரு விருந்தில் கலந்து கொள்வீர்கள். சமுதாய நலனுக்காக பாடுபடுபவர்களின் மதிப்பு உயரும். ஆசிரியர்கள் அவர்கள் துறையில் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும்.
காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். திருமணமாகாதவர்களின் வாழ்வில், புதிய காதல் துணையின் வரவால் போதிய ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை எப்போதும் போல் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரம் செய்பவர்கள், அவர்களது வியாபாரத்தை மேம்படுத்த, வியாபாரம் சம்பந்தப்பட்ட பயணங்களை மேற்கொள்வார்கள். அது அவர்களுக்கு நன்மையையே அளிக்கும். சகோதர, சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். முன்பை விட உடல் ஆரோக்கியம் மேம்படும். பெற்றோருடன் மன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள்.