தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

உங்கள் காதல் துணையிடம் இந்த வாரம் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்கிறது.. வார ராசிபலன்! - August Weekly Horoscope - AUGUST WEEKLY HOROSCOPE

Weekly Horoscope: ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று முதல் 10ஆம் தேதி வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 6:31 AM IST

மேஷம்: இந்த வாரம் சற்று கலவையான சுவாரஸ்யமான வாரமாக இருக்கும். உங்கள் வாராந்திரப் பணிகள் அனைத்தும் சரியாக திட்டமிட்டபடி செய்யப்படும். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் தேவையான வெற்றியை அடைவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் சில சாதகமான செய்திகள் வரக்கூடும். இந்த நேரத்தில், ஊழியர்கள் பணியிடத்தில் ஜுனியர்கள் மற்றும் சீனியர்களிடமிருந்து முழு உதவியைப் பெறுவார்கள். நீங்கள் வியாபாரம் செய்பவர் எனில், இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி குறித்து எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் எந்தவொரு திட்டம் அல்லது வியாபாரத்திலும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். இந்த கடினமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவர்கள் மற்றும் வேண்டாதவர்களை நீங்கள் இன்னும் தெளிவாக வேறுபடுத்தி அறிய முடியும். நீங்கள் சந்திக்கும் சவால்கள் வேலை, வியாபாரம் அல்லது குடும்பம் போன்ற எதுவாக இருந்தாலும், அவற்றை சமாளிப்பத்தில் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவளிப்பார். இந்த வாரம், உங்கள் காதல் உறவை சற்று கவனமாக கணக்கில் எடுத்துக் கொண்டு, உங்கள் அன்புத் துணையின் நிர்பந்தங்களை புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.

ரிஷபம்: இனிய வாரமாக அமையும். வீட்டில் சுப காரியங்களுடன் வாரம் தொடங்கும், இதற்காக உறவினர்களின் உதவி கிடைக்கும். உங்கள் உடல்நலம் சாதாரணமாக இருக்கும். மேலும், நீங்கள் புதிய உற்சாகத்துடன் முன்னேறி செல்வீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் ஒரு புனித யாத்திரை செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. வாரத்தின் தொடக்கத்தில், நீங்கள் சுகபோகங்களுக்காக பணத்தை செலவிடுவீர்கள். நீங்கள் நீண்ட காலமாக நிலம், கட்டிடம் அல்லது வாகனம் வாங்குவது பற்றி யோசித்து வருகிறீர்கள் என்றால், உங்கள் கனவு இந்த வாரம் நனவாகும். காதல் உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமான ஒன்று. உங்கள் காதல் துணையுடன் ஆழமான தொடர்பு உங்களுக்கு ஏற்படலாம். மேலும், அவருடன் அல்லது அவளுடன் சுவாரஸ்யமான நேரத்தை செலவிட அதிக வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் முயற்சியின் காரணமாக, வாரத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் தொழில் வாழ்க்கையில் மற்றவர்களை விட முந்தி இருப்பீர்கள். உங்கள் சீனியர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.

மிதுனம்: இந்த வாரம் வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களுக்கும் விடிவு பிறக்கும். தனித்துவமான அம்சம் என்னவென்றால், உங்கள் வேலை, வணிகம் அல்லது வாழ்க்கையில் வேறு எந்த முக்கிய குறிக்கோளாக இருந்தாலும், வீட்டிலும் வெளியிலும் உள்ள அனைவரிடமிருந்தும் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும், ஆனால் குடும்பத்தின் வயதான உறுப்பினரின் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். வேலையில் இருப்பவர்களுக்கு வார ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வாய்ப்பு அமையும். காதல் உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஒரு ஆச்சரியமான பரிசானது உங்கள் ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பில் கிடைக்கலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாரத்தின் முடிவில், குழந்தைகளைப் பற்றிய சில பாசிட்டிவான செய்திகளை பெற்றிருப்பீர்கள், இது உங்கள் மரியாதையை அதிகரிக்கும். நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த அல்லது ஒத்திவைக்கப்பட்ட திட்டங்கள் திடீரென நலம் விரும்பிகளின் ஆதரவுடன் முன்னோக்கிச் செல்லும்.

கடகம்: இந்த வாரம் அவர்கள் விரும்பும் சாதனையைப் பெற தங்கள் சோம்பேறித்தனத்தை கைவிட்டு கடினமாக உழைத்து நேரத்தை சரியாக உபயோகிக்க வேண்டும். இல்லையெனில், வாய்ப்பு கைநழுவி போகலாம். வாரத்தின் இரண்டாம் பாதியில் அன்புக்குரியவர்களுடனான உங்கள் ரிலேஷன்ஷிப்பானது நன்றாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களில் பழக்க வழக்கங்களில் நல்ல திருப்பங்களை, முன்னேற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் காதல் துணையுடன் கருத்து வேறுபாடு இருந்தால், ஒரு பெண் தோழியின் உதவியுடன் தவறான புரிதல்களை சரி செய்வீர்கள். மேலும், உங்கள் காதல் உறவு மீண்டும் வலுவானதாக ஆகக்கூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உறவினர்களுடன் இனிமையான நேரத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பருவகால நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். இந்த நேரத்தில், ஒரு நண்பர், நலம் விரும்பி அல்லது காதல் துணையின் உதவியுடன், உங்கள் குறிப்பிடத்தக்க சில சிக்கல்களை நீங்கள் தீர்க்க முடியும்.

சிம்மம்: இந்த நேரத்தில் உத்தியோகம் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய அனைத்து விஷயங்களுமே சுவாரஸ்யமாகவும், வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், உங்கள் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தவறான புரிதல்கள் ஒரு நண்பரின் உதவியால் சீரமைக்கப்படும். மேலும், அவர்களுடனான உங்கள் உறவுகள் மீட்டெடுக்கப்படும். இந்த நேரத்தில், நீங்கள் சில முக்கியமான குடும்பப் பொறுப்புகள் உங்களுக்கு சுமையாக இருக்கலாம். இவை அனைத்திற்கும் மேலாக, பருவகால மாற்றங்கள் அல்லது நாள்பட்ட நோய்களும் தோன்றுவதால் உடலில் வலி ஏற்படும். உங்கள் ரொமாண்டிக் கனெக்ஷனைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் காதல் துணையுடன் வலுவான பிணைப்பை அனுபவிப்பீர்கள். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் பெற்றோர் உட்பட உங்கள் சீனியர்கள் என அனைவரிடமிருந்தும் முழுமையான ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். இளைஞர்களின் பெரும்பாலான நேரம் கேளிக்கைகளிலும் பிக்னிக்குகளில் கலந்துகொள்வதிலும் செலவிடப்படும். இரண்டாவது பகுதி உங்களுக்கு கொஞ்சம் குழப்பமாகவும், சோர்வாகவும் இருக்கலாம்.

கன்னி: இந்த வாரம் சக ஊழியர்களுடன் பழகும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்கள் சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் இருவரையும் தூண்டி விட்டு, அவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம் அல்லது அவர்கள் உங்கள் இலக்கிலிருந்து உங்களைத் திசைத்திருப்ப முயற்சிக்கலாம். இந்த பிரச்னையை தீர்க்க வீட்டில் ஒரு வயது முதிர்ந்த நபரின் துணை அவசியம். இந்த நேரத்தில், மாணவர்களின் கவனம் படிப்பை விட்டு விலகிச் செல்லலாம். அரசியலில் ஒரு பதவி அல்லது குறிப்பிடத்தக்க பொறுப்புக்காக காத்திருக்கும் நபர்கள் புதிய நம்பிக்கையை காண்பார்கள். காதல் உறவுகளைப் பொறுத்தவரை, இந்த வாரம் எப்பொழுதும் போல் சாதாரணமாகவே இருக்கும். உங்கள் காதல் உறவில் அன்பும், நல்லிணக்கமும் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்க்கையின் பரபரப்பு மற்றும் சலசலப்புக்கு மத்தியில், உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். வார இறுதிக்குள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியைச் சந்திக்க நேரிடலாம்.

துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் பேசும்பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் பேச வேண்டும், ஏனெனில் அவர்களின் வார்த்தைகள் அவர்களின் முயற்சிகளை முறியடிக்கும் அல்லது அழிக்கும். வாரத்தின் நடுப்பகுதியில், நீங்கள் உத்தியோகம் அல்லது வியாபரத்திற்காக நீண்ட அல்லது குறுகிய தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கலாம். பயணத்தின் போது, உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் மதிப்புமிக்க பொருட்கள் இரண்டையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். காதல் உறவில் தவறான புரிதல்கள் உங்களுக்கும் உங்கள் காதல் துணைக்கும் இடையிலான இடைவேளியை அதிகரிக்கக்கூடும். உணர்ச்சிகளின் அடிப்படையில் காதல் தொடர்பான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். திருமணத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாரத்தின் இரண்டாம் பாதியில், உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் வகையில் எந்த நகைச்சுவையான விஷயத்தையோ அல்லது வேலையில் யாருடனும் ஜோக்காக நடந்து கொள்ளாதீர்கள். இந்த நேரத்தில், உங்கள் தொழில் வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் உங்கள் நற்பெயருக்கு கேடு வராமல் நடந்து கொள்ள வேண்டும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களைப் பொறுத்தவரையில் இது மிகவும் மகிழ்ச்சியான வாரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் மனதுக்கு பிடித்தமான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் அல்லது பதவி உயர்வு பெறலாம். வருவாய் அதிகரிப்பதற்கான பல வழிகள் அல்லது ஆதாயங்கள் உருவாக்கப்படும். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். எந்தவொரு திட்டத்திலும், முன்பு செய்திருந்த முதலீடுகள் நல்ல பலனைத் தரும். நீதிமன்றத்தில் ஏதேனும் ஒரு வழக்கு நிலுவையில் இருந்தால், தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். உங்கள் காதல் துணையுடன் சில அற்புதமான தருணங்களைச் செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம், நீங்கள் பழைய நண்பர்களையும் சந்திக்கலாம். அவர்களுடன் நீங்கள் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட்டு உங்களின் கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு பெரிய ஆச்சரியமான பரிசை நீங்கள் உங்களை நேசிப்பவரிடமிருந்து பெறலாம். ஆரோக்கியம் சீராக இருக்கும். குழந்தை தொடர்பான எந்தவொரு பெரிய மன அழுத்தமும் தீர்க்கப்படும். வாரத்தின் இரண்டாம் பாதியில் நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்

தனுசு: வாரத்தின் தொடக்கத்தில், மோசமான உணவுப் பழக்கம் அல்லது நாட்பட்ட நோயினுடைய ஆரம்பத்தின் விளைவாக நீங்கள் உடல் வலியை அனுபவிக்கலாம். வாரத்தின் நடுப்பகுதியில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். தேர்வு போட்டிக்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் முயற்சியின் முழு பலனையும் அடைந்து வெற்றி பெறுவார்கள். ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது, மன அழுத்தம் நிறைந்த காலங்களில், உங்கள் காதல் துணை உங்களுக்கு ஒரு கேடயமாக செயல்படுவார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை நிகழ்த்திய ஒரு முக்கிய சாதனை உங்களுக்கு மதிப்பையும் மரியாதையையும் தேடிக் கொடுக்கும். சரியான உணவுப் பழக்கம் மற்றும் சீரான தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றை சரியாக செய்யவும். வார இறுதிக்குள், உங்களுக்கு சில பாசிட்டிவ்வான செய்திகள் கிடைக்கக்கூடும். இல்லத்தரசிகள் பூஜை புனஸ்காரங்களுக்காக அதிக நேரம் ஒதுக்குவார்கள். இந்த நேரத்தில், உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க நீங்கள் நேரம் எனர்ஜி ஆகிய இரண்டையும் சரியாக நிர்வகிக்க வேண்டும்.

மகரம்: இந்த வாரம் மகர ராசிக்காரர்கள் தங்கள் முயற்சியின் முழு பலனையும் பெறுவார்கள். வாரத்தின் தொடக்கத்தில், முந்தைய சாதனைகளுக்காக உங்கள் உத்தியோகத்தில் உங்களுக்கு அங்கீகாரம்கிடைக்கலாம். சீனியர்களும் ஜூனியர்களும் உங்கள் பணியைப் பாராட்டுவதைக் காணலாம். கடந்த வாரத்திலிருந்து நீங்கள் கவலை கொண்டிருந்த உங்கள் வீட்டுப்பிரச்சினைகளுக்கு விடிவு காலம் பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதலான வருமான ஆதாரங்கள் கிடைக்கும். மொத்தத்தில் செல்வநிலை உயரும். காதல் உறவுகள் பலப்படும் மற்றும் ஸ்திரமாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் துணையுடன் ஒரு நீண்ட அல்லது குறுகிய தூரம் நீங்கள் பயணம் செய்யலாம். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு சிறப்பான செய்திகள் கிடைக்கும். வார இறுதியில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கடமைகளை விரைவாக முடிக்க உதவும் ஒரு அன்புக்குரியவரை நீங்கள் சந்திப்பீர்கள்

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தின் ஆரம்பம் சற்று கடினமாக இருக்கும். இருப்பினும், உங்கள் புத்திசாலித்தனம், நுண்ணறிவு மற்றும் தைரியத்துடன் எந்தவொரு சூழ்நிலையையும் நீங்கள் சமாளிக்க முடியும். இதன் தனித்துவமான அம்சம் என்னவென்றால், எந்தவொரு தடையையும் வெல்ல உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு உங்களுக்கு இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் உங்கள் நிறுவனத்தில் உள்ள ரகசிய எதிரிகளிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இருப்பினும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், அவர்கள் தங்கள் ஆதரவாளர்களிடமிருந்து ஆலோசனையைக் கேட்க வேண்டும். தொழில் ரீதியாக இது உங்களுக்கு ஒரு சிறந்த நேரமாக இருக்கும். காதல் விவகாரங்களில் பரஸ்பர நம்பிக்கையும், நெருக்கமும் வளரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் இருந்தால், உங்கள் உடல்நிலை சீராக இருக்கும். நீண்ட காலமாக தங்களின் தொழிலை மாற்றுவதைக் கருத்தில் கொண்டவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கலாம். அவர்களுக்கு தேவையான வணிக நன்மைகளும் கிடைக்கும்.

மீனம்: இந்த வாரம் முழுவதும் மீன ராசிக்கரர்களுக்கு அன்பும் அதிர்ஷ்டமும்தொடர்ந்து இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாகுவதன் மூலம், வாரத்தின் ஆரம்பத்தில் நீங்கள் பெரிய சாதனைகளை நிகழ்த்தலாம். வியாபார சூழ்நிலை சாதகமாக இருக்கும், தேவையான விரிவாக்கம் ஏற்படும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு குறிப்பிடத்தக்க சாதனையும் உங்களுக்கு உயர்ந்த மரியாதையைப் பெற்றுத்தரும். ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப்பைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் அன்பை யாரிடமாவது தெரிவிக்க வேண்டும் என நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், அப்படிச் செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அதே நேரத்தில், தற்போதைய ரொமாண்டிக் ரிலேஷன்ஷிப் ஸ்திரமாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வாரத்தின் இரண்டாம் பாதியில், நீங்கள் ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று தனிமையில் உங்களின் நேரத்தை செலவிட விரும்புவீர்கள். இந்த நேரத்தில், உங்கள் மனம் மதம், ஆன்மீகம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடும்.

ABOUT THE AUTHOR

...view details