மேஷம்:நீங்கள் யோகிகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறீர்கள். கலை கல்வியில் பட்டப்படிப்பு படிக்கலாமா? இசை, நடனம் அல்லது நீண்ட காலமாக நீங்கள் ஆர்வம் கொண்ட ஏதாவது விஷயத்தைக் கற்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். இந்த நாள் ஒரு நல்ல, சிறப்பான நாள். இனிமையான வெற்றியை கொடுக்கும் என்று தெரிகிறது.
ரிஷபம்:உங்களுக்கு நெருக்கமானவர் அனைவரும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவைக் கொடுக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம். நீங்கள் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளவும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் முயற்சி செய்ய வேண்டும். மேலும், குடும்பத்தில் சண்டை வெடிக்கலாம் என்று கணிப்பு சொல்கிறது. நீங்கள் மோதல்களைத் தவிர்ப்பதும், பிரச்சனையைச் சரியாகக் கையாள உதட்டில் புன்னகையை அணிந்து கொள்வது அவசியம்.
மிதுனம்:பணிகளை செய்து முடிக்க மூளையை கசக்கிப் பிழிய வேண்டியிருக்கும். இருந்தாலும் தாழ்மையுடன் நடந்து கொள்வதும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உண்மையில் நீங்கள் முதலாளியாக இல்லாவிட்டாலும் கூட, அதுபோன்ற தோரணையை காட்ட வேண்டியிருக்கும். உங்கள் அசாதாரண புத்திசாலித்தனம், அபாரமான செயல்திறனாக வெளிப்பட்டு, இன்று உங்களுக்கு பாதுகாப்பு அரணாகும். குடும்பம் தான் உங்கள் வெற்றிக்கு அடித்தளம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
கடகம்:கடினமாக உழைத்து வேலை அல்லது வியாபாரத்தில் உங்களுக்கான இடத்தை தக்க வைப்பீர்கள். கூட்டாளிகளுடனான உறவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும். நெகிழ்வும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் நிலவும். உங்கள் அன்புக்குரியவருடன் இணைந்து இன்றைய மாலைப் பொழுதை உல்லாசமாக செலவிடுவீர்கள்.
சிம்மம்: இன்று வாழ்க்கையின் ஒரு முக்கிய தருணமாக இருந்தால் அதற்கு ஆச்சரியப்பட வேண்டாம். இது சொந்த வாழ்க்கை அல்லது வேலை தொடர்பான முக்கிய விஷயத்தை கவனமாக கையாண்டு, நாசூக்காக செயல்படவேண்டும். நடுநிலைமையை கடைபிடியுங்கள். இன்று சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயர்ந்து மிகப்பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம்.
கன்னி:உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு உங்களுக்கான நாளை உருவாக்கும். சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்கத் திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக்கொணர்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களின் மாலை நேரத்தை மகிழ்ச்சியாக்குவீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை கொஞ்சம் சேகரித்து வையுங்கள்.