தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்:தேடிவரும் காதலை மிஸ் பண்ணிடாதீங்க..சீக்கிரமே திருமணம் தான்! - எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - Today Rasipalan in Tamil

Today Rasipalan in Tamil: ஜூலை மாதம் 8ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 7:08 AM IST

இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்)
இன்றைய ராசிபலன் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)

மேஷம்: உங்களது உடல் நலன் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தற்போது உணவுப்பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் முக்கியத்துவம் செலுத்துவீர்கள். மேலும், இன்று பல நாட்களாக பார்க்காத நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது.

ரிஷபம்: திடீரென்று காதல் வயப்பட்டுள்ளதை உணர்வீர்கள். காதல் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், அச்சம் ஏதுமின்றி அதை பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் உங்களுக்கு திருமண உறவு கைக்கூடும் வாய்ப்புள்ளது.

மிதுனம்: உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் அதிகரிக்கும். அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், நீங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சேமிக்க வேண்டும்.

கடகம்:உங்கள் செயல்திறன் காரணமாக, நிதி நிலைமையை மேம்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்துறை ஆகிய இரண்டிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு கூடுதல் பொறுப்புகளும், பணிகளும் வழங்கப்படும். மாலையில் விருப்பப்படி நேரத்தை செலவிடுவீர்கள்.

சிம்மம்: மார்க்கெட்டிங் துறை தொடர்பான பணியில் இருப்பவர்கள், மேற்கொள்ளும் சந்திப்புகள் பலன் தரும். எனினும், பயணத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களிடமுள்ள திறமைகளை அறிந்து கொள்ள இது சரியான நேரம்.

கன்னி: உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள். சோர்வைத் தரும் பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் பணிகளை மேற்கொள்ளவும். மற்றவர்களுடன் கலந்து பழகுவது, உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

துலாம்:குடும்பத்தின் மீதும், குடும்ப விவகாரங்களின் மீதும் கவனம் செலுத்துவீர்கள். வீட்டிற்கான புதிய பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்: நாம் எப்போதும், நமது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துகிறோம். இன்று அவ்வாறு உங்களால் இருக்க முடியாது. உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்கவழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்வீர்கள்.

தனுசு:எந்த விஷயத்தை எடுத்து செய்தாலும், அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தலைமைப் பண்புடன், உங்களின் கீழ் பணிபுரிபவர்கள், ஆலோசனைக்காக உங்களை அணுகினால், அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, வழி நடத்துவீர்கள். பொதுவாக இன்று, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்:உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு செயல்பட்டால், பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். ஏனெனில், உங்களது உணர்வுகள் வெற்றிக்குத் தடையாக இருக்கும். அமைதியாக பொறுமையுடன் செயல்பட்டு, நேர்மறையான எண்ணம் கொண்டு இருந்தால், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.

கும்பம்:உங்களது உறுதியான நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடல் காரணமாக, உங்களது சந்தேகங்களும், கவலைகளும் காற்றில் கரைந்து போய், வெற்றி இலக்கை நோக்கி உறுதியாக செல்வீர்கள். வெற்றிப்பாதையில், பலரின் மனங்களையும் வெற்றி கொள்வீர்கள்.

மீனம்: வர்த்தகம் மற்றும் வெளிநாடுகளில் செய்த முதலீடுகளில் இருந்து பணவரவு அதிகம் இருக்கும். உங்களது தொடர்பு திறன் காரணமாக, நல்ல பரிவர்த்தனைகள் நிறைவேற்றப்பட்டு, எதிர்பாராத வகையிலான ஆதாயங்கள் கிடைக்கும்.

ABOUT THE AUTHOR

...view details