தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

"காதல் அனுபவம் ஏற்படும் வாய்ப்புள்ளது" - எந்த ராசிக்கு தெரியுமா? - TODAY RASIPALAN

டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

மேஷம்:பொன்னான வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். வருங்காலம் சிறந்த வகையில் அமைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, புதிய இலக்குகளை அமைத்துக் கொள்வீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப வருங்காலத்தில் பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்:சிறந்த வகையில் முடிவுகளை மேற்கொள்ள நீங்கள் செயல்பட வேண்டிய தேவையுள்ளது. பல்வேறு செயல்களை உங்களுக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். உங்களை சோர்வடையச் செய்யும் கசப்பான எண்ணங்களை பற்றி நினைக்காமல் இருக்க விரும்புவீர்கள். உங்களுடைய பல பிரச்சனைகளுக்கு சுலபமாக தீர்வு காண்பீர்கள்.

மிதுனம்:உங்களது செய்கை, உங்களின் ஆளுமைப் பண்பை நிர்ணயிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். மற்றவர்கள் உங்களை தவறாக நினைக்கக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, மற்றவர்களிடம் இருந்து சிறிது ஒதுங்கி இருந்து, நேரத்தை தனிமையில் செலவழிப்பது பயனைத்தரும். உங்களது நண்பரை மகிழ்விக்க அதிக பணம் செலவழிப்பீர்கள்

கடகம்:சமூகப் பொறுப்புகள் மீது உங்கள் கவனம் திரும்பும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருப்பது இதற்கு காரணமாகும். தனிமையில் நேரம் கழிக்க விரும்பலாம். மாலைப்பொழுதில், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் நீங்கள் முக்கியத்துவம் பெறக்கூடும்.

சிம்மம்:சதி நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தீய விஷயங்களை தவிர்க்கவும். உங்கள் கிரக நிலைகள் காரணமாக, ஆபத்தான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. பணியை பொருத்தவரை, அமைதியை கடைப்பிடிக்கவும். நாளின் முடிவில், உங்களுக்கு பிரச்சனை கொடுத்துவந்த சில கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும். அமைதியாக இருந்தால் அனைத்து பிரச்சனைகளும் தானே தீர்ந்துவிடும்.

கன்னி:நிதி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி, லாபம் ஈட்ட முயற்சி செய்வீர்கள். வருங்கால திட்டங்களையும், நெருக்கடி வந்தால் சமாளிப்பதற்கான திட்டங்களையும் நீங்கள் வகுப்பீர்கள். சில ஆவணங்கள், வருங்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் வகையில் இருக்கும்.

துலாம்:அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். சட்ட ரீதியான பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் சாத்தியம் உள்ளது. நீங்கள் மற்றவர்களின் கருத்துக்கு ஒத்துப் போகாத நிலை ஏற்படலாம். தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவரை நீங்கள் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: நண்பர்களுடன் நேரம் கழிக்கும் வாய்ப்பிருப்பதால் உற்சாகத்துடன் இருப்பீர்கள். வேலை அதிகம் இருக்கும் என்பதால் திட்டமிட்டு கவனத்துடன் செயல்படவும். அதிக வேலை காரணமாக, உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆனால், உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் நீங்கள் நேரத்தை செலவழிக்கிறீர்கள் என்பதால் குதூகலமும் மற்றும் உற்சாகமும் நிறைந்திருக்கும்.

தனுசு :காதல் அனுபவம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீங்கள் நெடுநாட்களாக முடிக்காமல் இருந்த பணியை மிக எளிதாக நிறைவு செய்து விடுவீர்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும்.

மகரம்:எதிர்பார்ப்புகள் காரணமாக, மகிழ்ச்சி சோகம் ஆகிய இரு உணர்வுகளும் உங்களுக்கு ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், அதே சமயத்தில், மற்றவர்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை நீங்கள் நிறைவேற்ற இயலாமல் இருக்கும். உங்களது கருத்துக்களை செயல்படுத்த அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும்.செலவு சிறிது அதிகரிக்கும். ஆனால், இது போன்ற மனநிலை சமூக ரீதியாக உங்களது புகழை பாதிக்கும் வண்ணம் இருக்கலாம்.

கும்பம்: பணியில் ஈடுபடுவதற்கான சக்தி இல்லாததை போல் நீங்கள் உணரக்கூடும். ஆனால், விரைவில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உங்களை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் இருக்கும் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, எச்சரிக்கையுடன் செயல்பட்டு குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டும்.

மீனம்:வர்த்தகத்தில் கவனம் செலுத்துவதுடன், குடும்பத்தினருடன் நல்ல முறையில் நேரத்தை செலவிடுவீர்கள் என்று உங்களது கிரக நிலைகள் தெரிவிக்கின்றன. பணியை பொருத்தவரை, உங்களுக்கு வித்தியாசமான குதூகல அனுபவம் கிடைக்கும். நல்லவை நடக்கும் என்று நம்புவதில் எந்தவித தவறும் இல்லை.

ABOUT THE AUTHOR

...view details