மேஷம்:உங்களது வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்து கொள்வது சிறந்தது என்பதை இன்று உணர்ந்து கொள்வீர்கள். நீங்கள் கொடுக்கும் அனைத்தும், ஒன்பது மடங்காக பெருகி உங்களை வந்து சேரும். வெளிப்படையான மனதுடன், அனைவரின் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு பழகுவதால் உங்கள் மீதான மதிப்புக் கூடும்.
ரிஷபம்:உங்களை யாரும் வெற்றி கொள்ள முடியாத அளவில் திறன் பெற்றவராக இருப்பீர்கள். ஆனால் உங்கள் ஆற்றலை வீணடிக்காமல், கவனமாக செயல்படவும். சில பணித் திட்டம் தொடர்பாக மன அழுத்தம் உண்டாகலாம். மாலை நேரத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அமைதியான முறையில் நேரத்தைக் கழிப்பீர்கள்.
மிதுனம்:இன்று வாழ்க்கையின் முக்கியமான காலகட்டமாக இருக்கும். சில முக்கிய முடிவுகளை மேற்கொள்ளக் கூடும். பணியிடத்தில் உங்களுக்கு தோன்றும் புதுமையான கருத்துக்கள் மற்றும் நீங்கள் மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகளின் மூலம் நிறுவனத்திற்கு வெற்றி தேடி தருவீர்கள். பொழுதுபோக்குக்காகவும், வசதிக்காகவும் நீங்கள் கூடுதல் செலவுகளை மேற்கொள்ளலாம்.
கடகம்:இன்றைய தினம், சிறிது மந்தமாக தொடங்கும். ஆனால் நேரம் செல்லச் செல்ல சுறுசுறுப்பை பெறுவீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், உணவுப் பழக்க வழக்கத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். உடல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெறவும்.
சிம்மம்:உங்கள் பணியிடத்தில் ஏற்படும் ஆரம்பக்கால நெருக்குதல்கள் பற்றி கவலை கொள்ள வேண்டாம். நாள் செல்லச் செல்ல, அனைத்துப் பிரச்சினைகளும் தீரும். மனதிற்குப் பிடித்தவர்கள் மீது அன்பு செலுத்தி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கன்னி:பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மதிய நேரத்தில், உங்கள் தொழில் திறமை மிகச் சிறந்து விளங்குவதாக உணர்வீர்கள். உங்களது செயல்திறன் காரணமாக, மேலதிகாரிகளுக்கு உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி அதற்கு ஒப்புதல் பெறுவீர்கள். இன்று மாலை, உங்கள் மனதுக்குப் பிடித்தவருக்கு பரிசளித்து மகிழ்வீர்கள்.