தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்: மன்மதன் உங்களை நோக்கி அம்பு எய்யப் போகிறார்..! எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? - Today Rasipalan in Tamil

Today Rasipalan in Tamil: ஏப்ரல் 15ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

Today Rasipalan in Tamil
இன்றைய ராசிபலன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 7:00 AM IST

Updated : Apr 15, 2024, 7:09 AM IST

மேஷம்:கற்பனை வளம் மிக்கவர் என்பதால் அனைவரையும் மகிழ்விப்பீர்கள். வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்புண்டு. நீங்கள் சாதனையாளர் என்றாலும், செய்ய முடியும் அளவைவிட அதிகமான அளவு பணிகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு திறமைகள் அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கையுடன், நேர்மையாக உழைப்பீர்கள். கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றி நிச்சயம்.

ரிஷபம்: பணியிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, அமைதியாக நேரத்தைக் கழிப்பது நல்லது. உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறந்த வகையில் நேரத்தைக் கழிக்க, அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கக் கூடும். இன்று முழுவதும், மசாலாக்கள் நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று விரும்புவீர்கள்.

மிதுனம்:சில காரணங்களால் உங்கள் மனதில் வருத்தமும், பதற்றமும் ஏற்படும். கவலைகளை வெளிப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், காதல் துணையின் அன்பை பெறுவீர்கள். பழைய விஷயங்களை மறந்து, நம்பிக்கையுடன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடகம்:புதிய வகை உணவு வகைகளை தயாரிப்பீர்கள். அதனைக் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டு மகிழ்வார்கள். பழைய நினைவுகளில் மூழ்கக்கூடும். விருந்தினரின் வருகையால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

சிம்மம்:பல்வேறு விஷயங்கள் தொடர்பாக, மற்றவர்களிடம் கருத்தைக் கேட்டு அறிவீர்கள். அப்போது ஒன்றும் பேசாமல் பொறுமையாக அவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்பதால், முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

கன்னி:இன்று ஊக்கம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களது கற்பனைத் திறன் காரணமாக, சிறந்த கலைஞராக வெளிப்படுவீர்கள். கற்பனைத் திறன் காரணமாக வார்த்தைகள் சரளமாக, தடையில்லாமல் வரும். ஆடல் பாடலில் பங்கு கொண்டால், அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். கலைகள் அல்லது எழுதுவதை பொழுதுபோக்காகக் கொண்டால் உங்களுக்கு நல்லது.

துலாம்:சிறிய விஷயங்கள் அல்லது பிரச்சனைகள் குறித்து சிந்தித்து, மன அழுத்தம் கொள்ள வேண்டாம். மன அமைதியை பெற யோகா அல்லது தியானம் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பணியிடத்தில் சில விஷயங்கள் தொடர்பாக நெருக்குதல் ஏற்படும் வாய்ப்புண்டு. முக்கியமான விஷயங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது சாதக மற்றும் பாதகமான நிலைகளை கவனமாக ஆராய்ந்த பிறகு எடுக்க வேண்டும்.

விருச்சிகம்: இன்று மிகச் சரியாக வேலைப் பார்க்கும் திறனுடையவர் என்று போற்றப்படுவீர்கள். பணியில், குறிப்பிட்ட நெறிமுறைகளை மிகச் சரியாக பின்பற்றி, நேரம் தவறாமல் நடந்து கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்வீர்கள்.

தனுசு: சிந்தித்து செயல்படுவது நல்லது. மன்மதன் உங்களை நோக்கி அம்பு எய்த தயாராக இருக்கிறான். காதல் உணர்வு காரணமாக நீங்கள் இளமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். ஆனால், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்களது கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும்.

மகரம்:தேனீயைப் போல் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை மிக அதிகமாக இருக்கும் காரணத்தால், உங்களைப் பற்றி நினைக்க உங்களுக்கு நேரம் இருக்காது. நீங்கள் கற்பனைத் திறனுடன் இருக்க ஆசைப்படுவீர்கள். ஆனால், வேலை அதிகமிருப்பதால், அதற்கான சுதந்திரம் இருக்காது. நேர நிர்வாகம் பற்றி நீங்கள் அறிந்து கொண்டு, முன்னுரிமை தர வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டு செயல்படுவதால், வெற்றி காத்திருக்கிறது.

கும்பம்:அதிர்ஷ்டம் நிறைந்த நாள். சிறியது முதல் பெரியது வரை உங்களது அனைத்து திட்டங்களும், நடைமுறைக்கு வரும். உங்கள் பாதையில் தடைகள் ஏதும் இருந்தால் மனம் தளர வேண்டாம். சோதனைகள் அனைத்தையும் கடந்து, வெற்றியாளராக இருப்பீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மீனம்:கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தினால், புதிய திட்டங்கள் எதையும் இன்று தொடங்குவது நல்லதல்ல. நீங்கள் எடுத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்டத்திலும், பாதகமான பலன்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. வர்த்தகத்தில் இருப்பவர்கள், ஒப்பந்தங்களை ஏற்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இதையும் படிங்க: வார ராசிபலன்: காதல் துணையை இன்று உங்களின் வீட்டில் அறிமுகம் செய்வீர்கள்..! எல்லாமே இனி அதிர்ஷ்டம் தான்.. - Weekly Rasipalan In Tamil

Last Updated : Apr 15, 2024, 7:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details