நீங்கள் டீ பிரியரா? தினசரி வீட்டிலும், கடையிலும் ஒரே மாதிரியான 'டீ' குடித்து சலிப்பு தட்டுகிறதா? ஆம் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான். எப்போதும், வழக்கமான டீ குடிப்பதை தவிர்த்து, ஒரு நாள் வீட்டில் இந்த 'கருப்பட்டி டீ' செய்து குடித்து பாருங்கள். நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக மற்றும் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். பாலில் கருப்பட்டி சேர்த்தால், பால் கெட்டுவிடுமே என்கிற பயமும் இனி வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அருமையான கருப்பட்டி டீ போட்டு குடிங்கள்.
தேவையான பொருட்கள்:
- பால் - 1 டம்ளர்
- தண்ணீர் - 1 டம்ளர்
- டீ தூள் - 2 டீஸ்பூன்
- இஞ்சி - 1 துண்டு
- ஏலக்காய் - 3
- கருப்பட்டி - தேவையான அளவு
கருப்பட்டி டீ போடுவது எப்படி?:
- முதலில், இஞ்சி மற்றும் ஏலக்காயை நன்கு இடித்து வைத்துக்கொள்ளவும். அடுத்ததாக, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பால் ஊற்றி கொதிக்கவிடவும் (தண்ணீர் ஊற்ற வேண்டாம்).
- இதற்கிடையில், மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, டீ தூள், தட்டி வைத்துள்ள இஞ்சி, ஏலக்காய் மற்றும் கருப்பட்டி சேர்க்கவும். தண்ணீரில் கருப்பட்டி நன்கு கரைந்து கொதித்து வர வேண்டும்.
- 3 நிமிடங்களில், கருப்பட்டி கரைந்து தண்ணீர் கொதித்து வரும், அப்போது அடுப்பை அணைத்து வடிகட்டினால் டீ போடுவதற்கான டிக்காஷன் தயார்.
- இப்போது, நீங்கள் டீ குடிக்கும் டம்ளரில் முக்கால் அளவிற்கு, நாம் தயார் செய்து வந்த டிக்காஷன் சேர்க்கவும். அதனுடன் வெதுவெதுபான பாலை சேர்த்து ஒரு ஆத்து ஆத்தினால் சூப்பரான கருப்பட்டி டீ ரெடி.
இதையும் படிங்க: |