தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / lifestyle

மூட்டு வலிக்கு தீர்வு தரும் ஆட்டுக்கால் சூப்...இப்படி செய்ங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க! - AATU KAL SOUP RECIPE IN TAMIL

மழைக்கும் குளிருக்கும் இதமாக இருக்கும் ஆட்டுக்கால் சூப்பை சுவையாக மற்றும் எளிதாக எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETVBharat)

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 14, 2024, 2:20 PM IST

குளிர் காலத்தில் சளி, இருமல், தொண்டை கரகரப்பு என பல தொந்தரவுகள் வரும். அப்போது, சூடாகவும் சத்து நிறைந்ததாகவும் ஏதேனும் அருந்தினால் நல்ல இருக்குமே என தோன்றும். அந்த சமயத்தில், இந்த ஆட்டுக்கால் சூப் செய்து குடித்துப்பாருங்கள். தொண்டை கரகரப்பு , சளி, இருமல் என நம்மை நோக்கி படையெடுத்த அழையா விருந்தாளிகள் எங்கு போனார்கள் என்றே தெரியாது. துளி கூட எண்ணெய் பயன்படுத்தாமல், சத்தான ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி என பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

  • ஆட்டுக்கால் - 1 கிலோ
  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • இஞ்சி - 1 துண்டு
  • பூண்டு பல் - 10
  • சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
  • தக்காளி- 1/2
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி - 1 கைப்பிடி
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - 2 லிட்டர்

ஆட்டுக்கால் சூப் செய்முறை:

  1. முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  2. பின்னர், அதனுடன் இஞ்சி, தோல் உறிக்கப்பட்ட பூண்டு சேர்த்து அரைக்கவும். அடுத்ததாக, இந்த கலவையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து ஒன்னு ரெண்டாக அரைக்கவும். (சின்ன வெங்காயம் இல்லையென்றால், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்)
  3. பின்னர், இந்த கலவையுடன் தக்காளி சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
  4. இப்போது, மஞ்சள் உப்பு சேர்த்து கழுவி வைத்துள்ள ஆட்டுக்காலை குக்கரில் சேர்த்து, நாம் அரைத்து வைத்துள்ள கலவையும் சேர்க்கவும்.
  5. அதன் கூடவே, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, தீயை ஹைய் பிளேமில் வைத்து 10 முதல் 12 விசில் விடவும்.
  6. 12 விசில் வந்ததும், குக்கரின் பிரஷர் ரிலீஸானதும் நறுக்கி வைத்த கொத்தமல்லியை சேர்த்து இறக்கினால் கமகம ஆட்டுக்கால் சூப் தயார்.

ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • நாள்பட்ட மூட்டு வலி நீங்கும்
  • நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்
  • நல்ல ஓய்வு மற்றும் உறக்கத்திற்கு வழிவகுக்கும்
  • எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது
  • உடல் எடை இழப்பிற்கு உதவும்

இதையும் படிங்க:சளி, இருமலை விரட்டும் முருங்கைக்காய் சூப்..பக்குவமா எப்படி செய்யனும் தெரியுமா?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details