இஞ்சி: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை கட்டுப்படுத்த இஞ்சி உதவியாக இருக்கும். அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளை இஞ்சி கொண்டுள்ளதால், இது மாதவிடாய் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அந்த வகையில், மாதவிடாயின் போது இஞ்சி டீ அல்லது சிறு இஞ்சி துண்டை மென்று சாறை முழுங்க பரிந்துரைக்கப்படுகிறது.
தூக்கம்:மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயமாக 8 மணி நேரம் தூங்க அறிவுறுத்தப்படுகிறது. மாதவிடாயின் போது நன்கு தூங்குவதால் ஹார்மோன் சமநிலையாக இருக்கும். இதனால், புத்துணர்ச்சியும் மன அமைதியும் பெறலாம். அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் காலத்தில் குறைவான நேரம் தூங்குவது அதிக வலியை உண்டாக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஹீட்டிங் பேட்: வயிற்று வலியைக் குறைக்க சுடான தண்ணீர் பாட்டில் அல்லது ஹீட்டிங் பேட்கள் உதவும். அடிவயிற்றில் ஹீட்டிங் பேட் வைத்து கொஞ்ச நேரம் உறங்குவதால் தசைகள் தளர்ச்சியடைந்து வலியை குறைக்கும். அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் நாட்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதும் நல்ல பலன் தரும்.
சாக்லேட்:மாதவிடாய் நாட்களில் வலி மட்டுமல்லாமல், சிலர் கோபம், எரிச்சல், பதட்டம் போன்றவற்றாலும் அவதிப்படுவார்கள். இந்த மாதிரியான சூழலில், சாக்லேட் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. சாக்லேட்டில் உள்ள செரட்டோனின் எனும் வேதிப்பொருள் மனதை அமைதியாக மாற்ற உதவியாக இருக்கிறது.
உணவில் கவனம்:மாதவிடாய் நாட்களில், நாம் சாப்பிடும் உணவும் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும். தர்பூசணி, பீட்ரூட், ஆரஞ்சு போன்ற பலவகைகளும், வெண்டைக்காய், ப்ராக்கோலி போன்ற கீரை வகைகளும் வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை இந்த நாட்களில் எடுக்க வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. நார்ச்சத்து உணவுகள் வயிறு வீக்கத்திற்கு காரணமாக மாறலாம்.