இருதய பிரச்சனை: திராட்சையில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இருதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, கருப்பு மற்றும் சிவப்பு திராட்சையின் தோலில் உள்ள ரெஸ்வெராட்ரோல் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2018 ஆம் ஆண்டு ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியல் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அல்சைமர் தடுப்பு:அல்சைமர் நோயின் முன்னேற்றத்தை குறைக்க ரெஸ்வெராட்ரோல் (Resveratrol) உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது நினைவாற்றல் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
தோல் பராமரிப்பு: இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் மிகவும் உதவியாக இருக்கும்.
புற்றுநோயைக் குறைக்கும் வாய்ப்புகள்: திராட்சையில் அதிகம் உள்ள ரெஸ்வெராட்ரோல், புற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் திராட்சைப்பழத்தை இரண்டு வாரங்களுக்கு சாப்பிட்டு வர, பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மலச்சிக்கல் மற்றும் உடல் பருமனை எதிர்த்துப் போராடுகிறது: ரெஸ்வெராட்ரோல் மற்றும் ஸ்டெரோஸ்டில்பீன் ஆகியவை உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். திராட்சையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கும் என்று கூறப்படுகிறது.
எலும்பு வலிமை: திராட்சையில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. வைட்டமின் ஏ நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது. இது செல் வளர்ச்சிக்கும் கண் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கிறது என்று விளக்கப்பட்டுள்ளது. நோய்களில் இருந்து விரைவில் குணமடைய இது பயனுள்ளதாக இருக்கும்.