தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

புஷ்பா 2ஆம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! படக்குழு அதிகாரப்பூர்வ தகவல்! - Pushpa 2 release date - PUSHPA 2 RELEASE DATE

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் தயாராகி உள்ள புஷ்பா இரண்டாம் பாகம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 10:38 PM IST

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் படம் புஷ்பா இரண்டாம் பாகம். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படத்தின் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கியது.

இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், ராஷ்மீகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்து உள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு முன்னர் அறிவித்து இருந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தை திட்டமிட்ட நாளில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் நிலவுவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தில் பல்வேறு பணிகள் இன்னும் இறுதி கட்ட நிலையிலே உள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூனின் நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவரான சரத் சந்திர நாயுடு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவது குறித்து தகவல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர், புஷ்பா இரண்டாம் பாகம் திட்டமிட்ட ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாவதில் சிக்கல் நிலவுவதாகவும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி படம் உலக அளவில் வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். அதேநேரம் தீபாவளியை ஒட்டி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது! பெயர் என்ன தெரியுமா? - Amala paul blessed boy Baby

ABOUT THE AUTHOR

...view details