திருவனந்தபுரம்:கேரள அரசு சார்பில் மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல் குறித்து வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் உள்ளிட்ட பல நடிகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள் மீது நடிகைகள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத் (AMMA) தலைவர் மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக் குழு பதவி விலகினர். இந்நிலையில், பிரபல நடிகை பார்வதி திருவோத்து ஹேமா கமிட்டி அறிக்கை விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் யூடியுப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “நடிகர்கள் ராஜினாமா செய்த செய்தி கேட்டு இது எவ்வளவு கோழைத்தனமான செயல் என தோன்றியது. இந்த விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு பதவி விலகுவது கோழைத்தனமானது. இந்த விஷயம் குறித்து நடிகர்கள் சங்கம் அரசிடமாவது பேசியிருக்க வேண்டும். இதே நடிகர் சங்கம் தான் நடிகைகளை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மீண்டும் சங்கத்திற்கு வரவேற்றது.