தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கோட் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம்?.. வெங்கட் பிரபு ஸ்டைலில் 3 நிமிட BTS காட்சிகள்! - GOAT movie duration - GOAT MOVIE DURATION

GOAT movie duration: விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ரன்னிங் டைம் குறித்தும், மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

கோட் பட புகைப்படங்கள்
கோட் பட புகைப்படங்கள் (Credits - @archanakalpathi X account)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 24, 2024, 3:30 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது விஜய் அரசியல் கட்சி தொடங்கிவிட்டதால், சினிமாவில் இருந்து விலகுவது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'கோட்' (Greatest of all time) திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள கோட் படத்தில் மோகன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள கோட் படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இதனையடுத்து, கோட் டிரெய்லர் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், கோட் திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கோட் படத்திற்கு முன்பதிவு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், படம் ஓடும் நேரம் (Running time) 179 நிமிடங்கள் ஆக உள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் படம் ஓடுகிறது. கோட் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் சில ஆபாச வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தேசத்தந்தை என்ற வார்த்தையும் மியூட் செய்யப்பட்டுள்ளது. படத்தில் விஜயின் கதாபாத்திர பெயர் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், படத்தின் இறுதி 3 நிமிடங்கள் BTS (Between the shots) எனப்படும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட நகைச்சுவையான தருணங்கள் திரையிடப்படுகிறது. முன்னதாக வெளியான அனைத்து வெங்கட் பிரபு படங்களிலும் இவ்வாறு BTS காட்சிகள் இடம் பெற்றிருக்கும். சமீப காலமாக ஆடியன்ஸ் மத்தியில் இரண்டரை மணி நேரம் மேலாக ஓடும் படங்களுக்கே திரைக்கதை வேகமாக இல்லை என விமர்சனம் எழுகிறது. அந்த வகையில், கோட் படம் ஓடும் நேரம் 2 மணி 59 நிமிடமாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் கோட் படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:மீண்டும் உளவாளியாக மிரட்ட வரும் கார்த்தி... ’சர்தார் 2’ படப்பிடிப்பு தொடக்கம்! - sardar 2 shooting started

ABOUT THE AUTHOR

...view details