தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரெபெல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! - rebel movie gv prakash

Rebel Movie: ஜிவி பிரகாஷ் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள ’ரெபெல்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Rebel Release Date
ரெபெல் மூவி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 9:44 PM IST

சென்னை:இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், சமீபத்தில் இவர் இசை அமைத்த கேப்டன் மில்லர், மிஷன் ஆகிய படங்கள் வெளியாகிப் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த 'அடியே' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஜி.வி.பிரகாஷ் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரெபெல். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ், ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டுள்ளார்.

உண்மை சம்பவங்களைத் தழுவி அதிரடி ஆக்சன் படமாகத் தயாராகி இருக்கும் 'ரெபல்' திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு வெளியிட்டார். இந்த நிலையில், ரெபெல் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரத்தியேக வீடியோ மூலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது ரெபெல் திரைப்படம். இப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இதற்காக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் இடம் பெறும் வசனங்களும், அதிரடி காட்சிகளும், ஜி வி. பிரகாஷின் ஆக்சன் அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:இயக்குநர் மிஷ்கின் இசையமைப்பாளராக பணியாற்றிய டெவில் திரைப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி ரிலீஸ்..

ABOUT THE AUTHOR

...view details