சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர், நடிகர் சேஷூ. அதன் பிறகு சந்தானம் நடித்த A1, டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக ஏ1 திரைப்படத்தில் "நான் யார்னு என்ன கேட்கறதவிட" என்ற வசனமும், "நீங்க நல்லா தூங்குங்க அத்தின்பேர்" என பேசும் வசனமும் ரசிக்கப்பட்டது.
அதேபோல், டிடி ரிட்டர்ன்ஸ் படத்திலும், சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இவரது நடனமும் ரசிகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. இந்நிலையில், இன்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.