சென்னை: ’அலங்கு’ திரைப்பட குழுவினரை நேரில் சந்தித்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார். எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அலங்கு’. அலங்கு திரைப்படத்தை பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி தயாரித்துள்ளார். சங்கமித்ரா அன்புமணி சினிமாத்துறையில் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.
அலங்கு திரைப்படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அலங்கு திரைப்படத்தை திரைத்துறையை சேர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் அலங்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சங்கமித்ரா, இயக்குநர் எஸ்.பி.சக்திவேல், இசையமைப்பாளர் அஜீஷ் உள்ளிட்டோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் அலங்கு திரைப்படத்தின் டிரெய்லரை பார்த்த விஜய் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட தனது தாயார் சௌமியா அன்புமணிக்காக சங்கமித்ரா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ’சர்கார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிப்பது போன்று புகைப்படம் வெளியானது.