தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"மிகத் தரமான, தைரியமான திரைப்படம்"... 'நந்தன்' படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்! - RAJINIKANTH PRAISED NANDHAN MOVIE

Rajinikanth praised nandhan movie: சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார்.

நந்தன் படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்
நந்தன் படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த் (Credits - @erasaravanan X account, Lyca Productions 'X' Page)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 26, 2024, 12:44 PM IST

சென்னை: நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா.சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் 'நந்தன்'. இந்தத் திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியானது. நந்தன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் பாராட்டினர்.

மேலும் சசிகுமார், பாலாஜி சக்திவேல் ஆகியோரது நடிப்பும் பாராட்டைப் பெற்றது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் சீமான், அண்ணாமலை, அன்புமணி ஆகியோர் மற்றும் திரைப்பிரபலங்கள் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இப்படத்தை பாராட்டினர். இந்நிலையில் 'நந்தன்' திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

இதையும் படிங்க: அமரன் படத்தில் ராணுவ வீரராக தாடி வைத்தது ஏன்?... பிக்பாஸ் வீட்டில் விளக்கம் அளித்த சிவகார்த்திகேயன்!

இதனையடுத்து நந்தன் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தின் இயக்குநர் இரா.சரவணன், நடிகர் சசிகுமார் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'நந்தன் மிகத் தரமான, தைரியமான, படம்' என மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். 'நந்தன்' திரைப்படம் அமேசான் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details