சென்னை:குரூப் -2 முதன்மை தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) பணிகளுக்கான கொள்குறி வகை முதல்நிலை தேர்வு (OMR) 14.09.2024 அன்று முற்பகல் நடைபெற்றது. தற்போது முதன்மைத் தேர்வு தாள் - II பொதுஅறிவு மற்றும் பொது திறனறிவும் நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது
ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு (OMR) 08.02.2025 முற்பகலில், தாள் - 1 தமிழ்மொழி தகுதித் தேர்வு (Descriptive) அன்றைய தினம் பிற்பகலும் நடைபெற உள்ளது.