தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

பிஇ., பிடெக் பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு துவங்கியது! - ENGINEERING COUNSELING - ENGINEERING COUNSELING

Engineering Counseling: பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்க 30 ஆயிரத்து 699 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப கல்வி இயக்ககம்
தொழில் நுட்ப கல்வி இயக்ககம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 12:02 PM IST

சென்னை:2024-25ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் இளங்கலையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. அதில் ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 6ஆம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் ஜூலை 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. பொதுப்பிரிவில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் பொதுப் பிரிவிற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 29) தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 110 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமும், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமும் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க 30 ஆயிரத்து 699 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்க கட் ஆப் 200 முதல் 179 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ், கட் ஆப் மதிப்பெண் 179 வரையில் பெற்ற ஆயிரத்து 343 மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். தொழிற்கல்விப்பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 85 வரையில் பெற்ற 2 ஆயிரத்து 267 மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் 435 மாணவர்களும் முதல்கட்ட கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டக் கலந்தாய்விற்கு ஜூலை 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாணவர்கள் தங்கள் விரும்பும் கல்லூரிகளையும், பாடப்பிரிவையும் தேர்ந்தெடுக்கலாம். ஒரு மாணவர் அவர் விரும்பும் எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும், பாடப்பிரிவுகளையும் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப வரிசைப்படியாக பதிவு செய்யலாம். மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆகஸ்ட் 1ஆம் தேதி வழங்கப்படும்.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாணவர்கள் இடத்தை உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும். அதனை ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 10 மணிக்குள் உறுதி செய்து, ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தான் மேலே பதிவு செய்த கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர்வதற்கு விரும்புகிறேன் என்பதை தெரிவிக்க வேண்டும்.

ஆகஸ்ட் 3 முதல் 7ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளை உறுதி செய்து, அதில் சேரலாம். ஆகஸ்ட் 10ஆம் தேதி பதிவு செய்ததில் மேல உள்ள கல்லூரியில் இடம் கிடைத்தால் சேர விரும்புகிறேன் என கூறியவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு முன்னர் இடங்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களையும்www.tneaonline.orgஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வின் மூலம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 102 இடங்கள் நிரப்பப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

join ETV Bharat WhatsApp channel click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பேராசிரியர்களை போலி கணக்கு காண்பித்த பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்; அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி! - fake professors issue

ABOUT THE AUTHOR

...view details