தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் உதவித்தொகை; இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு SBI வழங்கும் பம்பர் சலுகை..அக்.1ம் தேதிக்குள் விண்ணப்பியுங்கள்! - SBIF SCHOLARSHIP 2024

SBIF SCHOLARSHIP FOR UG,PG STUDENTS: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறக்கட்டளை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது. இந்த நிதி உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது? கடைசி தேதி என்ன? போன்ற விவரங்களை காணலாம்...

Credits- Etv Bharat
கோப்புப்படம் (Credits- Etv Bharat)

By ETV Bharat Health Team

Published : Sep 22, 2024, 10:16 AM IST

ஹைதராபாத்: பள்ளிப்படிப்பை முடிக்கும் பல மாணவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் மேற்படிப்பை படிக்க முடியாமல் கைவிடுகின்றனர். உயர்கல்வி படித்து நல்ல பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வறுமை அவர்களுக்கு தடையாக உள்ளது. இதுபோன்ற மாணவர்களுக்கு உதவும் வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அறக்கட்டளை உதவித்தொகையை அறிவித்துள்ளது.

இளங்கலை மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும் முதுகலை மாணவர்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் என ஆஷா உதவித்தொகை திட்டத்தின் 3வது பதிப்பு வழங்குகிறது. இந்நிலையில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன? கடைசி தேதி எப்போது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தகுதியான கல்லூரி மாணவர்கள்:

  • இந்தியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
  • விண்ணப்பதாரர்கள் நடப்பு கல்வியாண்டில் (2024-25) படிப்பை தொடர வேண்டும்
  • NIRF தரவரிசையில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்
  • முந்தைய கல்வியாண்டில் குறைந்தது 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். (ரூ. 3 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்)
  • எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

  • கடந்த கல்வியாண்டு மதிப்பெண் பட்டியல்
  • அரசு அடையாள அட்டை (ஆதார்)
  • நடப்பு ஆண்டிற்கான கல்வி கட்டணம் செலுத்தப்பட்ட ரசீது
  • கல்லூரி சேர்க்கை கடிதம்
  • வங்கிக் கணக்கு விவரங்கள் (மாணவர்கள்/பெற்றோர்கள்)
  • வருமான சான்றிதழ்
  • விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
  • சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)

எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் sbifashascholarship.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • உதவித்தொகை பத்தியில் இளங்கலை மாணவர்கள்/முதுகலை மாணவர்களுக்கான SBIF ஆஷா உதவித்தொகை திட்டத்தை கிளிக் செய்யவும்
  • கீழே தோன்றும் Apply Now விருப்பத்தை கிளிக் செய்யவும்
  • அங்கு உங்கள் விவரங்களை உள்ளிட்டு உள்நுழையவும். இந்த உதவித்தொகை திட்டத்திற்கு நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், அந்த விவரங்களுடன் உள்நுழையவும். இல்லையெனில் Register விருப்பத்தை கிளிக் செய்து அங்கு கேட்கப்பட்ட விவரங்களை உள்ளிட்டு பதிவை முடிக்கவும். அதன் பிறகு அந்த விவரங்களுடன் Buddy4Study-ல் உள்நுழைய வேண்டும்
  • அதன் பிறகு SBIF Asha ஸ்காலர்ஷிப் திட்டம் 2024 விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றிய பின்.. முன்னோட்டத்தைப் பார்த்து சமர்ப்பிக்கவும்

தேர்வுமுறை:2024ம் ஆண்டின் SBI ஆஷா ஸ்காலர்ஷிப் தேர்வு செயல்முறை கல்வி செயல்திறன், நிதி நிலை மற்றும் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும். பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தொலைபேசி நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவை இதில் அடங்கும். இந்த தேர்வுகளில் தேர்வானால் உதவித்தொகை பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

உதவித்தொகை எவ்வளவு?:இந்த உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு இளங்கலை மாணவரும்(UG) ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெறுவார்கள். அதே நேரத்தில் ஒவ்வொரு முதுகலை மாணவர்களுக்கு (PG) ரூ. 70 ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

கடைசி தேதி: ஆர்வமுள்ள மாணவர்கள் அக்டோபர் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:

பள்ளி மாணவர்களுக்கு SBIF சார்பில் ரூ.15,000 உதவித்தொகை - யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி விண்ணப்பிக்கலாம்?

முத்ரா கடன்: ரூ.10 லட்சம் வரை எளிதில் கடன்; எப்படி விண்ணப்பிப்பது!

ABOUT THE AUTHOR

...view details