சென்னை:பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வுகள் 2025 மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க, கடந்த 8 ஆம் தேதி முதல் (டிச.8) இன்று வரை (டிச.17) ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இக்கால அவகாசம் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.