சிக்பல்லபுரா: தெலுங்கு மக்களிடையே பிரசித்திபெற்ற 'மார்கதர்சி சிட்பண்ட்' நிறுவனம், கர்நாடக மாநிலம், சிக்பல்லபுராவில் தனது புதிய கிளையைத் திறந்துள்ளது. இது அந்நிறுவனத்தின் 115-ஆவது கிளையாகும். மார்கதர்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சைலஜா கிரண் புதிய கிளையை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மார்கதர்சி நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவுக்கு பிறகு, புதிய கிளையின் முதல் வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஷைலஜா கிரண், அதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார். மார்கதர்சி நிறுவனத்தில் சீட்டு துவங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வாடிக்கையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
வங்கிகளுடன் ஒப்பிடுகையில் பணத்தை எளிதாக பெற முடிவதாகவும் மற்றொரு வாடிக்கையாளர் தெரிவித்தார். மேலும், பல ஆண்டுகளாக தங்களது நிதி ஆதாரமாக மார்கதர்சி சிட்பண்ட் திகழ்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மார்கதர்சி நிறுவனத்தில் சீட்டு செலுத்தும் ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், பணம் எடுக்கும்போது தங்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர்.