டெல்லி :மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (ஏப்.26) இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகா, கேரளா, அசாம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதியம் 1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிபுராவில் 54.47 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூரில் 54.26 சதவீதம், சத்தீஸ்கரில் 53.09 சதவீதம், மற்றும் அசாமில் 46.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மிக குறைவாக 31 புள்ளி 77 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி பீகாரில் 33.80 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 42.88 சதவீதம், கர்நாடகாவில் 38.23 சதவீதம், கேரளாவில் 39.26 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 38.96 சதவீதம், ராஜஸ்தானில் 40.39 சதவீதம், உத்தரப் பிரதேசத்தில் 35.73 சதவீதம் வாக்குகள் மதியம் 1 மணி நிலவரப்படி பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.