மாணவர்களின் நேர்மைப் பண்பை வளர்க்க 'நேர்மை அங்காடி' திறப்பு - 'நேர்மை அங்காடி'
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: நேர்மை எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், 'நேர்மை அங்காடி' திறந்து எல்லோருக்கும் முன் மாதிரியான பள்ளியாக மாநகராட்சி நடுநிலைப்பள்ளி விளங்கி வருகிறது. நேர்மை அங்காடியின் எல்லா பொறுப்பும் மாணவர்கள் வசமே விடப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் நேர்மை குணத்தை ஊக்கப்படுத்தும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களின் பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.