நீலகிரியில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்..!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக உள்மண்டல பகுதிகளில் பருவமழைக்கு பிந்தைய காலத்திற்கான வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று (நவ.16) துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. அப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கடமான்கள், புள்ளி மான்கள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன.
அங்கு ஆண்டுக்கு ஒருமுறை மற்றும் பருவமழைக்கு முன்பும், பின்பும் விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், முதற்கட்டமாக 321 சதுர கி.மீ பரப்பளவிற்கு உட்பட்ட பகுதிகளான தெப்பகாடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை மற்றும் மசினகுடி ஆகிய 5 வனச்சரகங்களில், பருவமழைக்கு பிந்தைய கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கப்பட்டது.
முன்னதாக தெப்பகாடு வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில், நேற்று (நவ.15) கணக்கெடுப்பில் பங்கேற்கும் வன அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. இதில் மசினகுடி வனச்சரக ரேஞ்சர் பாலாஜி உள்ளிட்ட வனத் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.