40 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்.. நெகிழ்ச்சி சந்திப்பு! - இன்றைய திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-08-2023/640-480-19375543-thumbnail-16x9-dgfl.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Aug 28, 2023, 2:16 PM IST
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1982 - 84ஆம் ஆண்டுகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் 40 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள் பின்னர் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் உள்ள துரைசாமி பிள்ளை சிலைக்கு முன்னாள் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்கள் நலன் கருதி மாணவர்கள் அமர 40 இருக்கைகளை பள்ளிக்காக முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் ஒன்றாக பயின்ற மாணவர்கள் சந்தித்துக் கொள்ளும் இந்த பழைய மாணவர் சந்திப்பில், இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், சென்னை மாநகர உதவி காவல் ஆணையருமான ராஜசேகர், பள்ளியின் தலைமை ஆசிரியர் பால்சாமி உள்ளிட்ட ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.