Guru Purnima - திருவண்ணாமலையில் கிரிவலம்; அலைமோதிய பக்தர்களின் கூட்டம் - thiruvannamalai annamalaiyar temple
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உலகப்பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் பெளர்ணமி அன்று வரும் பெளர்ணமி, குரு பெளர்ணமியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று(ஜூலை 2) குரு பௌர்ணமியினை முன்னிட்டு திருவண்ணாமலையில் வழக்கத்தை விட அதிகமான அளவில் பக்தர்கள் வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். முன்னதாக இந்த குரு பெளர்ணமி ஜூலை 2ஆம் தேதி இரவு 7:46 மணிக்குத் தொடங்கி மறுநாள் 3ஆம் தேதி காலை 5.49 மணிக்கு நிறைவு பெறும் எனவும், இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது சிறந்தது என்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகமும் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
அதன் படியே இரவு 07:46 மணிக்குத் தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் கிரிவலம் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.