பிரதமர் குறித்து அவதூறு கருத்து! காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட முயன்ற பாஜகவினரால் சலசலப்பு! - முகநூல்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 8, 2023, 10:09 PM IST
திண்டுக்கல்: பேரணியில் ஈடுபட்ட பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறிது நேரத்திற்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பாஜகவினர் திரண்டனர். அதன்பின் அங்கிருந்து காங்கிரஸ் அலுவலம் நோக்கி செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் சில பாஜவினர் வேறு வழியாக காங்கிரஸ் அலுவலகம் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் தரப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், பள்ளி விடும் நேரத்தில் இந்த மோதல் ஏற்பட்டதால், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அச்சம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் கலைத்தனர். பின்னர் சட்ட ஓழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.