ETV Bharat / top-videos

பட்ஜெட் 2022 :வட இந்தியாவுக்கு ஏராளமான நிதி; தென்னிந்தியாவுக்கு வஞ்சனை - கதிர் ஆனந்த் எம்.பி., பேச்சு - DMK MP Kathir Anand SPEECH about union budget 2022

டெல்லி: நாடாளுமன்ற பிப்.1ஆம் தேதிபட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (பிப்.9) மக்களவையில் பேசிய திமுக எம்.பி., கதிர் ஆனந்த், "இந்த பட்ஜெட்டில் வட இந்தியாவுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவுக்கு வஞ்சனை மட்டுமே செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் மத்திய அரசு பொது மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதன் மூலம், அதனைச்சார்ந்து இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும். மத்திய அரசின் அறிவிப்புகள் எல்லாமே காகிதத்தில் மட்டுமே உள்ளது நடைமுறையில் ஏதும் செயல்படுத்தப்படுவதில்லை. விவசாயிகளுக்கு அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு இதுவரை உருப்படியாகச் செய்யவில்லை. தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி வருவதாகக் கூறும் மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட். நீட் மாநில உரிமைகளைப்பறிக்கிறது. மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது' என விமர்சித்துள்ளார்.

பட்ஜெட் 2022 குறித்து திமுக எம்பி கதிர் ஆனந்த் துரைமுருகன் பேச்சு

author img

By

Published : Feb 9, 2022, 10:52 PM IST

டெல்லி: நாடாளுமன்ற பிப்.1ஆம் தேதிபட்ஜெட்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் இன்று (பிப்.9) மக்களவையில் பேசிய திமுக எம்.பி., கதிர் ஆனந்த், "இந்த பட்ஜெட்டில் வட இந்தியாவுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவுக்கு வஞ்சனை மட்டுமே செய்யப்படுகிறது. பட்ஜெட்டில் மத்திய அரசு பொது மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டதன் மூலம், அதனைச்சார்ந்து இருக்கக்கூடிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும். மத்திய அரசின் அறிவிப்புகள் எல்லாமே காகிதத்தில் மட்டுமே உள்ளது நடைமுறையில் ஏதும் செயல்படுத்தப்படுவதில்லை. விவசாயிகளுக்கு அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் இந்த அரசு இதுவரை உருப்படியாகச் செய்யவில்லை. தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கி வருவதாகக் கூறும் மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட். நீட் மாநில உரிமைகளைப்பறிக்கிறது. மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மக்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது' என விமர்சித்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.