ETV Bharat / sukhibhava

கோடைக்காலத்தில் உதடுகள் வறட்சி.. என்ன செய்யலாம்.. என்ன செய்யக்கூடாது.. 7 டிப்ஸ்..

கோடைக்காலத்தில் உதடுகளில் வெடிப்பு, வறட்சி ஏற்படுவதை தடுக்க பின்வரும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள். அதேபோல சிலவற்றை செய்வதை தவிர்த்துவிடுங்கள்.

கோடைக்காலத்தில் உதடுகள் வறட்சி
கோடைக்காலத்தில் உதடுகள் வறட்சி
author img

By

Published : Feb 27, 2023, 3:29 PM IST

பொதுவாக குளிர்காலத்தில் ஈரப்பதம் காரணமாக உதடுகள் வறண்டு போவதை நாம் அனுபவித்திருப்போம். ஆனால், பல பேருக்கு கோடை காலத்திலும் உதடுகளில் வெடிப்பு மற்றும் வறட்சி ஏற்படுகின்றன. இதற்கு காலநிலை மட்டுமல்லாமல், வேறு பல காரணங்கள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கோடைக்காலத்தில் உதடுகளை நாக்கால் ஈரப்படுத்துவது வறட்சியை தடுக்கும் என்று பலர் அதை செய்கின்றனர். உண்மையில் அது உதடுகளை மேலும் வறட்சியாக்கும். தொடர்ந்து அப்படி செய்வதால் ஈஸ்ட் தொற்று கூட ஏற்படலாம். ஆகவே, கோடையில் உதடுகளில் வறட்சி ஏற்படாமல் தவிர்க்க என்ன செய்யலாம். என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துள்ளுங்கள்.

  • உங்கள் உதடுகளை வறட்சி மற்றும் வெடிப்பிலிருந்து காக்க முதலில் சூரிய வெப்பத்தை எதிர்கொள்ள உடலை தயார் படுத்த வேண்டும். அதிகப்படியாக தண்ணீரை குடிக்க வேண்டும். அதேபோல, நீர்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். குறிப்பாக, நீரிழப்பு ஏற்படாதவாறு உடலை பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • தரமற்ற லிப் பாம்கள் மற்றும் அதிகமாக ரசாயனம் பயன்படுத்தப்பட்ட பிற கிரீம்களை பயன்படுத்துவதை குறைத்துத்து கொள்ளுங்கள். கோடைகாலத்தில் ரசாயனத்தின் வீரியம் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இதற்கு பதிலாக ஜோஜோபா ஆயில், ஷியா பட்டர் போன்றவற்றை சீரான இடைவெளியில் உதடுகளில் வைத்து சில நொடிகள் மசாஜ் செய்யலாம்.
  • மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் உட்கொள்ளும் உணவில் வைட்டமின் பி இல்லாமல் போனால், உதடுகளில் வறட்சி ஏற்பட்டுவிடும். ஆகவே, வைட்டமின் பி நிறைந்த முட்டை, இறைச்சி, கல்லீரல், பச்சைக் காய்கறிகள், மீன், பால், பாலாடைக்கட்டி போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
  • அதிகப்படியான வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்ளல் கூட வறண்ட உதடுகளுக்கு காரணமாக இருக்கலாம். அதாவது வைட்டமின் ஏ மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளும்போது, அவை கல்லீரல் செயல்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. இதனால், தோல்களில் பக்க விளைவுகள் ஏற்படும். எனவே, இயற்கையாகவே வைட்டமின் ஏ நிறைந்த பால், தயிர், கேரட், கீரை, உருளைக்கிழங்கு, மாம்பழம், சப்போட்டா, ஆப்ரிகாட் உள்ளிட்டவை சாப்பிடலாம்.
  • ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆறவைத்து, வடிகட்டிக் குடித்து வந்தால் உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டிருந்தால் படிப்படியாக நிவாரணமாகும்.
  • கோடையில் அதிகப்படியான ஈரப்பதமும் உதடுகள் வறட்சியாவதற்கு முக்கிய காரணமாகும். ஆகவே, காற்றோட்டம் இல்லாத ஈரப்பதம் நிறைந்த அறைகளில் அதிக நேரம் தங்குவதை தவிர்க்க வேண்டும்.
  • கற்றாழை ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பது மற்றும் உதடுகளில் தடவுவது நல்லது. தேன்-சர்க்கரை ஸ்க்ரபை உதடுகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து சுத்தம் செய்வதும் உதடுகளை ஈரப்பதமாக்கும்.

இதையும் படிங்க: சிக்கன் Vs மட்டன்: எது ஆரோக்கியத்திற்கு கேடு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.