மூளை பாதிப்பால் அவதிப்படும் நோயாளிகளை கண்காணிப்பதற்காக புதிதாக 'ஸ்மார்ட்ஹெல்மெட்' கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தச் சாதனத்தை மேலும் மேம்படுத்த அனாடோமிக்ஸ் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா அரசு சார்பில் 1 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சி.எஸ்.ஐ.ஆர்.ஓ ஆராய்ச்சியாளர் உமுத் குவெங்க்," ஏழு லட்சம் ஆஸ்திரேலியர்கள் உள்பட உலகளவில் 69 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மூளை பாதிப்பால் அவதிப்படுகின்றனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளியின் மூளையை கண்காணிப்பது மகிவும் ஆபத்தானது ஆகும்.
சில சமயங்களில், அவர்களுக்கு வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. கண்காணிக்கும் வசதியும் மருத்துவமனையில் மட்டும் தான் உள்ளது. பெரிய சாதனங்களை உபயோகித்து பல மணி நேரம் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால், இந்தப் புதிய சாதனம் மூலம் மூளையை எளிதாக கண்காணித்திட முடியும். இந்தச் சாதனம் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தரவு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஸ்மார்ட் ஹெல்மெட் மூளையில் சிறிய வலி ஏற்பட்டாலும் எளிதாக கண்டறிந்து சேகரித்துவிடும். மருத்துவர்கள், ஸ்மார்ட் ஹெல்மெட் சேகரித்த தரவுகளை உடனடியாக கணினிக்கு மாற்றி ஆய்வு செய்துக்கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இந்தச் சாதனம் முழுமையடைந்து வணிக ரீதியாக பயன்பாட்டிற்கு வரும் போது, பல நாடுகளிலிருந்து ஆர்டர்கள் குவியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.