ETV Bharat / sukhibhava

தாம்பத்திய உறவில் ஆர்வம் இன்மை: காரணம் என்ன? தீர்வு என்ன? - தாம்பத்திய உறவில் ஈடுபாடு இன்மைக்கு காரணம் என்ன

How To Increase Sexual Feelings In Tamil: திருமணம் முடிந்து சில நாட்களோ அல்லது ஆண்டுகளோ கழிந்த பிறகு கணவன் மனைவி இடையே தாம்பத்திய உறவில் ஏற்படும் விருப்பம் இன்மை வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இதை தவிர்ப்பது எப்படி என்பது குறித்த முக்கிய ஆலோசனைகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 10:00 PM IST

சென்னை: திருமணம் ஆன தம்பதிகள் இடையே சரியான புரிதல் இல்லாமல் சண்டை சச்சரவுகள் வருவது உண்டு. ஆனால் பாலியல் ரீதியான உணர்வில் ஈடுபாடு குறையும்போது தம்பதிகள் உறவில் விரிசல் ஏற்படும் அளவுக்குப் பிரச்சனைகள் வருவது உண்டு. திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணம் நடைபெற்ற புதிதிலோ இருக்கும் அளவுக்கு சில நாட்கள் அல்லது சில வருடங்களுக்குப் பிறகு பாலியல் உறவில் தம்பதிகள் ஆர்வம் காண்பிப்பது இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

ஆரம்பத்தில் இருக்கும் காதலும், ஈர்ப்பும், விருப்பமும் படிப்படியாகக் குறைந்து பாலியல் உறவை முற்றிலுமாக தவிர்க்கும் நிலைக்குச் செல்கின்றனர். மேலும், தம்பதிகளில் ஒருவர் பாலியல் உறவில் ஆர்வம் காண்பித்தும் மற்றொருவர் அதைத் தவிர்க்கவும் முயற்சிக்கும்போது இருவருக்கும் இடையே சண்டை சச்சரவுகள், மனக்கசப்புகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுகின்றன. மந்தமான இந்த பாலியல் வாழ்க்கைக்கான காரணங்கள் என்ன? அதற்குத் தீர்வு என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறையக் காரணம் என்ன?

வாழ்க்கையின் மீது ஏற்படும் சலிப்பு; தாம்பத்திய உறவில் ஈடுபாடு குறைய முக்கியமான காரணம் வாழ்க்கையின் மீது ஏற்படும் ஒருவகையான சலிப்புதான். தொழில், பணிச்சுமை, குடும்பம் மற்றும் சமூகப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நம்மை அறிந்தும் அறியாமலும் ஒருவிதமான அழுத்தம் நிறைந்த வாழ்க்கைக்குத் தள்ளப்படுகிறோம். இதனால் எரிச்சல், கோவம், மனச்சோர்வு உள்ளிட்டவை ஏற்பட்டு அது தம்பதிகளின் பாலியல் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது.

தம்பதிகள் மனம் விட்டுப் பேசாமல் இருப்பது; தம்பதிகள் இருவருக்கும் இடையே ஏற்படும் பணிச்சுமை மற்றும் கடமை ரீதியான சவால்கள் உள்ளிட்ட பலவற்றால் இருவரும் தனிமையில் அமர்ந்து மனம் விட்டுப் பேசும் நேரத்தைத் தவிர்க்கின்றனர். இதனால் இருவருக்கும் இடையே ஆரம்பத்தில் ஏற்படும் சிறிய இடைவெளி மெல்ல மெல்ல அதிகரித்து பெரிய இடைவெளியாக மாறிவிடும். மேலும் ஒருவர் மற்றொருவர் மீது சிறிய அளவிலாவது காட்டாத அக்கறை மற்றும் அன்பு மனக் கசப்பை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழல் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும், பாலியல் உணர்வைக் கொஞ்சம், கொஞ்சமாகக் குன்றச் செய்யும்.

பாலியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்; ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் மீதான தேடல், பொருளாதார ரீதியான நெருக்கடி எனப் பல பிரச்சனைகள் மற்றும் சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதற்காகத் தொழில், வேலை என ஓடிக்கொண்டே இருக்கும் தம்பதிகள் தங்களுக்குச் சற்று ஓய்வு கொடுத்து, அதாவது உங்கள் பிஸியான வாழ்க்கைச் சூழலில் இருந்து கொஞ்சம் விலகி வெளியில் எங்கேயாவது சென்று விடுமுறை நாட்களைச் சிறப்பாக்குங்கள். மன அமைதியுடன் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிடுங்கள்.

தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் உங்கள் காதலைப் பகிர்ந்து பேசிக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு பாலியல் மீதான ஆர்வத்தைத் தூண்டும். மேலும் உடற்பயிற்சி செய்வது, ஒரு நாளில் குறைந்தபட்ச நேரமாவது குடும்பத்திற்காகச் செலவிடுவது, இருவரும் ஒன்றாகக் காலை நேர நடை பயிற்சி மேற்கொள்வது, ஒருவரை ஒருவர் பாராட்டிப் பேசிக்கொள்வது, உள்ளிட்ட சில சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் பாலியல் உணர்வை அதிகரிக்கச் செய்யும். அதேபோல, உடலுறவுக்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: அதிரடி ஆஃபர்களுக்கு நடுவே பதறவைக்கும் மோசடிகள்.. பண்டிகை பர்சேஸில் கவனம் தேவை..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.