சென்னை: விலை மலிவான காய்கறிகளில் ஒன்றான வாழைக்காயை சாப்பிட மனம் தோன்றினாலும், வாழைக்காய் வாயு பிடிப்பை ஏற்படுத்தும் என்றும், உடல் எடையை அதிகரிக்கும் என்றும் அதை நிராகரித்து விடுவோம்.
வாழைக்காயில் உள்ள சத்துக்கள்: இப்படி நாம் நிராகரிக்கும் வாழைக்காயில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதென்று தெரியுமா?, வாழைக்காயில் நார்ச்சத்து, விட்டமின் சி, பி6, புரோவிட்டமின், பொட்டசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் உள்ளன.
உடல் எடையைக் குறைக்க: உண்மையிலேயே வாழைக்காய் உடல் எடையை அதிகரிக்குமா என்று கேட்டால் கண்டிப்பாக கிடையாது. வாழைக்காய் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. வாழைக்காய்கள் குறைந்த கலோரிகளை உடையவை. ஒரு வாழைக்காயில் 100 கிராம் கலோரிகளே உள்ளன. அவை நார்ச்சத்துக்கான ஆதாரமாக உள்ளன. ஆகையால் சிறிதளவு உணவு எடுத்துக்கொண்டாலும், வயிறு நிரம்பியது போன்ற திருப்தி கிடைக்கும்.
செரிமானத்தை ஊக்குவிக்கும்: வாழைக்காயில் காணப்படும் ப்ரீபயாட்டிக் விளைவு குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்த நல்ல பாக்டீரியாக்கள் உணவு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: வாழைக்காயில் உள்ள விட்டமின் சி, நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது. மேலும் நோய்த்தொற்றை எதிர்த்து போராடுகிறது. இது மட்டுமில்லாமல் விட்டமின் சி செல் பாதிப்பை தடுக்கிறது.
இதய நோய் அபாயத்தை குறைக்கிறது: வாழைக்காயில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் சோடியத்தின் விளைவுகளையும் சமப்படுத்துகிறது.
நீரிழிவு நோய்க்கு உகந்தது: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் vவாழைக்காயை சாப்பிட க்கூடாது என்று சிலர் கூறுகின்றனர். தவறான கூற்றாகும். வாழைக்காய் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இவை வாழைப்பழங்களை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன.
மலச்சிக்கலை சரி செய்யும்: வாழைப்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதுபோல வாழைக்காயும் மலச்சிக்கலை சரிசெய்யும் என்று தெரியுமா?. வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து குடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
இதையும் படிங்க: மக்கானாவில் இவ்வளவு நன்மைகளா?... என்னனு தெரிஞ்சா அசந்தே போயிடுவீங்க!