விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் முன் களப்பணியாளர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக உள்ள பெருமாளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனையடுத்து அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனையும் படிங்க: தமிழ்நாட்டில் 33,075 பேருக்கு கரோனா உறுதி!