விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும், பிரசித்திப்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் வரும்போது திடீர் வெள்ளம் ஏற்படும்போது தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியாமல் வனத்துறையினர் சிரமம் அடைந்து வந்தனர்.
இதைத் தடுக்க ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மலை உச்சி பகுதியில் தமிழ்நாடு அரசின் மூலம் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது வாக்கி டாக்கி மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்ள எளிதாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரள எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்துக்கு ஐஜி நேரில் ஆறுதல்