இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு அறிவித்தபடி இன்றிலிருந்து (மார்ச் 24) மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 190 பேர் தொடர் கரோனா கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், “மாவட்டத்தின் 28 கல்லூரி விடுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில் எட்டாயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் எட்டாயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 300 அவசர கால சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையிலுள்ளது” எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர், 16 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.
வீடுகளில்லாத சாலையோர மக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வட்டாச்சியர், நகராட்சி அலுவலகங்களில் உணவு வழங்கப்படும். மேலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சேவை செய்ய நினைத்தால் உள்ளாட்சி நிர்வாகத்தோடு இணைந்து செயல்படலாம் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இந்த 144 தடை உத்தரவில் வெளியே சுற்றுதல், உணவுப் பொருள்களை பதுக்குதல், அத்தியாவசியப் பொருள்களை விலையேற்றுதல், கரோனா குறித்து வதந்திகளைப் பரப்புதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால், பல்வேறு சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்