விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் அதிகரித்துவரும் கோடை கால வெப்பத்தினைச் சமாளிக்கும்வகையில், நோய் எதிர்ப்புச் சக்தி உணவுப் பொருள்களான கபசுரக் குடிநீர், இளநீர், பல்வேறு வகையான பழ வகைகள் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை நகர்ப் பகுதியில் பழைய பேருந்து நிலையம், முடங்கியார் சாலை, தென்காசி சாலை, சேத்தூர், செட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதியில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் கோடைகால தாகத்தைத் தீர்க்க பழ வகைகள், இளநீர் வாங்கிச் சென்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் துரை முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என். பாபுராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தாமதிக்காமல் மதுக்கடைகளை மூடுங்கள்- ராமதாஸ்